சென்னை: இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களில் மிகப் பெரிய நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் வரிக்கு பிந்தைய லாபத்தில் 12 சதவீதம் உயர்ந்து 1030.66 கோடிகள் லாபம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த வருவாயில் 7 சதவீதம் உயர்ந்து 2,645.72 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 2,473.64 கோடி ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தா வருவாய்கள் 18 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் இதனால் 961.42 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் முரண்பாடு ஆகியவற்றிற்கு முந்தைய வருவாய் 2.1 சதவீதம் அதாவது 1,769.85 கோடியாக அதிகரித்துள்ளது.
நான்காம் காலாண்டிற்கான வரிக்கு பிந்தைய லாபம்2016-2017 காலாண்டில் 235.9 கோடி ரூபாயுடன் பிளாட்டாக உள்ளது. 4வது காலாண்டு வருவாயில் 3 சதவீதம் உயர்ந்து 582.5 கோடி பெற்றுள்ளது. சந்தா வருவாய் 12 சதவீதம் உயர்ந்து 241.88 கோடியாக இந்தக் காலாண்டில் சன் டி நெட்வொர்க் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications