இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இதற்கான அறிவிப்பைத் தொலைத்தொடர்பு துறையும் மார்ச் மாதம் வெளியிட்டது.
மேலும் இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும் என்றும் அதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஆகும் என்றும் தமிழ் குரிட்டர்ன்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஏர்டெல் மற்றும் ஐடியா
இப்போது இந்தியாவின் முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் குறுந்தகவல்கள் மூலமாக ஆதார் எண் சரிபார்ப்புச் செய்ய வேண்டும் என்று தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன.
மேலும் தங்களது நிறுவனங்களின் ஸ்டோர்களிலும் உங்களது மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், இது இந்திய அரசி விதிமுறைகள் படி கட்டாயம் என்று விளம்பரப் பலகைகளும் வைத்துள்ளன.
கடைசித் தேதி
தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சந்தாதார்களின் ஆதார் விவரங்களைப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.
தலைத்தொடர்பு துறை நோட்டிஸ்
இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்குத் தலைத்தொடர்பு துறை அனுப்பிய நோட்டிஸில் சந்தாதார்களின் அதார் ஆவணங்களைப் பெற்று மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும், இது கட்டாயம் என்றும், அப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களது இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனை முதலாவதாக அமல் படுத்தும் முயற்சியில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இரண்டும் இறங்கியுள்ளன.
இணைப்பு பணி எப்படி நடைபெறுகின்றது?
முதலில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகத் தகவல் அளிக்கப்படும். இதனைப் பெற்ற உடன் அருகில் உள்ள உங்கள் நெட்வொர்க்கின் ஸ்டோர்களுக்கு ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் செல்ல வேண்டும்.
உங்கள் அதார் எண்ணை வைத்து ஸ்டோர் ஊழியர் உங்கள் மொபைல் எண்ணிற்கு அளிக்கும் சரிபார்ப்புக் குறியீட்டை அவர்களிடம் கூற வேண்டும். பின்னர் உங்களுடைய கரேகை சரிபார்ப்புச் செய்யப்படும். பின்னர் உங்களுக்கான இறுதிக் கட்ட சரிபார்ப்பு எஸ்எம்எஸ் 24 மணி நேரத்தில் வரும். அதற்கு நீங்கள் Y என்று பதில் அளித்த உடன் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
பிற ஆப்ரேட்டர்கள்
பிற நெட்வொர்க் ஆப்ரேட்டர்களும் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் போன்றே அதார் சரிபார்ப்பு முறையைப் பின்பற்றும் என்றும் கூறப்படுகின்றது.
ஜூன் 30
ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டினை இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் பான் கார்டு செயல்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவு
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications