ஏர் இந்தியாவை யார் வாங்குவார்கள்? பங்குகள் விற்பனைக்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன?

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பகிரங்கமாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் உள்ள அரசின் பங்குகளை விற்கத் தயார் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் அனைவருடைய மனதில் உள்ளது. நட்டத்தில் இயங்கி வரும் நிறுவனத்தினை யார் வங்க வருவார்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் அளவு 50,000 கோடியாக உள்ளது என்றும் இந்தக் கடனில் பெறும் பங்கிற்கு அதிகப் பொருட்செலவில் விமானங்களைக் கொள்முதல் செய்ததே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

விமானங்கள்

விமானங்கள்

ஏர் இந்தியா நிறுவனத்திடம் 114 விமானங்கள் உள்ளதாகவும் அதில் பெருப்பாளானவை போயிங் மற்றும் ஏர்பஸ்கள் எனவும் கூறப்படுகின்றது. ஏர் இந்தியா நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டில் 300 கோடி ரூபாய் இயக்க லாபம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது. இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 106 கோடியாக இருந்தது.

முதலீடுகள்

முதலீடுகள்

2017-2018 யூனியன் பட்ஜெட்டில் இருந்து 1,800 கோடி ரூபாயும், 2012-2016 வரிப் பணத்தில் இருந்து 24,000 கோடி ரூபாயும் ஏர் இந்தியா மீது முதலீடு செய்துள்ளது. ஆனால் ஏர் இந்தியாவிற்கு அதனைப் பயன்படுத்தி லாபம் பெற நீண்ட காலம் எடுக்கும்.

எனவே இங்கு நாம் ஏர் இந்தியா பங்குகள் விற்பனை தாமதம் ஆவதற்கான காரணங்களை இங்குப் பார்ப்போம்.

 

தோல்வியில் முடிந்த மறுசீரமைப்புத் திட்டங்கள்

தோல்வியில் முடிந்த மறுசீரமைப்புத் திட்டங்கள்

2012-ம் ஆண்டு மத்திய அரசு 2021-ம் ஆண்டிற்குள் 30,231 கோடி ரூபாயினை லாபம் திரட்டும் திட்டம் மற்றும் நிதி மறுசீரமைப்புத் திட்டமாக முதலீடு செய்ய முடிவு செய்தது.

2011-2012 கால கட்டத்தில் மத்திய அரசு 6,750 கோடி ரூபாயினை ஈக்விட்டியில் முதலீடு செய்தது, அது மட்டும் இல்லாமல் பணப் பற்றாக்குறை ஆதாயமாக 4,552 கோடி ரூபாயினை 2017-2018 நிதி ஆண்டில் ஈக்விட்டில் அளித்தது, ஈக்விட்டி மூலமாக 18,929 கோடி 2021 வரை விமானங்கள் வாங்கக் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லி அவர்களின் அறிக்கைப்படி 50,000 கோடி கடனில் இருக்கும் நிலையில் 25,000 கோடி விமானங்கள் மதிப்பீட்டிற்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது.

 

வங்கிகள் மறுப்பு

வங்கிகள் மறுப்பு

அன்மையில் 9,000 கோடி ரூபாய் கடனை ஈக்விட்டியாக வைத்துக்கொள்ள வைக்கப்பட்ட கோரிக்கையினை வங்கிகள் ஏற்க மறுத்துவிட்டன.

ஒருவேலை இப்போது ஏதும் ஒரு நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க ஒப்புக்கொண்டால் அவர்கள் கடன் மற்றும் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

 

லாபம் இல்லாத நிறுவனம்

லாபம் இல்லாத நிறுவனம்

ஊழியர்களுக்கு அதிகளவில் செலவு செய்து வந்ததால் ஏர் இந்தியா கடன் மற்றும் நிகர லாபத்தில் பெறும் சரிவைச் சந்தித்துள்ளது.

2016-2017 தற்காலிக புள்ளிவிவரங்களின் படி ஏர் இந்தியா விமான நிறுவனம் 300 கோடி செயல்பாட்டில் லாபம் அடைந்து இருந்தாலும் 3,643 கோடியாக நிகர நட்டத்தை அடைந்துள்ளது.

 

குறைந்து வரும் நட்டம்

குறைந்து வரும் நட்டம்

ஏர் இந்தியாவின் நட்ட அளவு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து கொண்டே வருவதையும் பார்க்கமுடிகின்றது. 2010-2011 காலக் கட்டத்தில் 6,865.17 கோடியாக இருந்து நட்ட மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டு வந்து 2014-2015 ஆண்டுகளில் 5,859.91 கோடிகளாக இருந்தது.

வருவாயினை அதிகர்க்க எடுத்த முடிவுகள்

வருவாயினை அதிகர்க்க எடுத்த முடிவுகள்

ஏர் இந்தியா நிறுவனம் வழித்தடங்களை ஒழுங்குபடுத்தி அதிக லாபம் அளிக்கும் வழித்தடங்களில் விமானத்தை இயக்கவும், செலவினங்களைக் குறைத்தும், சில வெளிநாட்டு அலுவலகங்களை மூடியும் தங்கலது வருவாயினை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றது.

சரிந்து வரும் சந்தை மதிப்பு

சரிந்து வரும் சந்தை மதிப்பு

தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 1990-ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் கால் பதிக்கத் துவங்கியதில் இருந்து ஏர் இந்தியாவின் சந்தை சரிந்துகொண்டே வந்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

அன்மையில் வெளிவந்த ஒரு அறிக்கையின் படி இந்தியா விமானச் சந்தையில் 41.4 சதவீதத்தினை இண்டிகோ நிறுவனம் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 12.9 சதவீதம், கோ ஏர் நிறுவனத்திடம் 8.1 சதவீதம் இந்திய விமானப் போக்குவரத்து சந்தை உள்ளது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 15.2 சதவீதமும், அதன் ஜெட் லைட் பிரிவிடம் 2.4 சதவீதம் சந்தையும் உள்ளது.

விஸ்தரா மற்றும் ஏர் ஏசியா

விஸ்தரா மற்றும் ஏர் ஏசியா

இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் புதிதாகக் கால் பதித்த விஸ்தரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இரண்டும் முறையே 3.2 சதவீதம் மற்றும் 3.3 சதவீதம் சந்தையைப் பிடித்துள்ளன.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து

கடந்த 10 ஆண்டாக விமானக் கட்டணங்கள் பல மடங்கு குறைந்து வந்தாலும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்திற்கு ஈடாக விமானக் கட்டணத்தைக் குறைக்க முடியவில்லை.

ரயில் கட்டணம் விலையில் விமானக் கட்டணம்

ரயில் கட்டணம் விலையில் விமானக் கட்டணம்

அதனால் ஏர் இந்தியா ராஜ்தானி இரண்டாம் மற்றும் முதல் வகுப்புக் கட்டணங்களுக்கு இணையான விலையில் டிக்கெட்களை அளிக்கின்றது.

தனியார் விமான நிறுவனங்கள்

தனியார் விமான நிறுவனங்கள்

அதே நேரம் போட்டி காரணமாகப் பல தனியார் விமான நிறுவனங்கள் குறைந்த விலையில் விமானக் கட்டணங்களை அறிவிக்கின்றன.

சொத்து

சொத்து

ஏர் இந்தியாவிற்குப் பல நகரங்களில் முக்கியமான இடங்களில் சொத்துக்கள் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+