உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் இந்த வேளையிலும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுமார் 1.71 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கி 9 நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
மேலும் இதில் மிகவும் குறைவான எண்ணிக்கையே விசா தேவைப்படுபவை, மீதமுள்ளவை அனைத்தும் உள்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டவை என இந்திய தெரிவித்துள்ளது.
9 நாடுகள்
விசா பிரச்சனை குறித்துப் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (RCEP) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஏசியன் நேஷன்ஸ் அடங்கிய 9 நாடுகளிடும் இந்திய பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்தது.
நெகிழ்வு
இதுகுறித்து விசாரணை செய்யும்போது இந்தியா, 9 நாடுகளில் செய்யப்படும் இறக்குமதிக்கு வரி சலுகையும், இங்கு வரும் ஐடி மற்றும் ஆர்கிடெக்ட் ஊழியர்களுக்கு அளிக்கும் வேலைக்கான விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் தளர்வும், நெகிழ்வையும் அளிக்குமாறு இந்திய கேட்டுக்கொண்டது.
இந்திய ஊழியர்கள்
மேலும் இந்திய ஊழியர்கள் மட்டும் அல்லாமல் இந்திய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், மற்றும் எச்சில் எனப் பல நிறுவனங்களும் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது எனவும் இந்திய அரசு சார்ப்பில் இந்தக் கூட்டத்தில் பதிவு செய்தது.
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா
இந்தக் கூட்டம் ஆசியா பசிபிக் கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு மத்தியிலாது. இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் விதித்துள்ள விசா கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அரசு தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ்
கடந்த சில மாதங்களில் இந்திய ஐடி நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 60,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதில் வெறும் 2000 பணிகளுக்கு மட்டுமே இந்திய நிறுவனங்கள் விசா கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிபிஓ
இந்தியாவில் இருக்கும் பல பிபிஓ திட்டங்கள் அனைத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்றுவிட்ட காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களும் தங்களது கிளையைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
விசா பிரச்சனை
இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் இருக்கும் விசா பிரச்சனை விரைவில் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்..
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications