ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைப்பதினால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டும் இல்லாமல் வங்கி கணக்கையும் போர்ட் செய்துகொள்ளலாம் என்று ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்பிஐ துணை கவர்னர் எஸ் எஸ் முந்த்ரா செவ்வாய்க்கிழமை விரைவில் வங்கி எண்ணை போர்ட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்தும், தொழில்நுட்பம் குறித்தும் ஒரு வருடமாக ஆய்வுகள் செய்யப்பட்டுப் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
எதனால் வங்கி கணக்கு போர்டபிளிட்டி
இந்திய வங்கி குறியீடுகள் மற்றும் நியமங்கள் வாரியம் (BCSBI) கூட்டத்தில் பங்கேற்று முத்ரா பேசிய போது தான் ஒரு வருடம் முன்பு வங்கி கணக்கு எண் போர்ட்டபிலிட்டி குறித்து ஆலோசனை வழங்கியதாகவும் இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்குச் சேவை குறைபாடுகள் இருப்பின் பிற வங்கி கணக்கிற்கு மாறுகொள்ளலாம் என்றும் கூறினார்.
இந்திய வங்கி குறியீடுகள் மற்றும் நியமங்கள் வாரியம்
இந்திய வங்கி குறியீடுகள் மற்றும் நியமங்கள் வாரியம் இந்திய ரிசர்வ வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்திய வங்கி குறியீடுகள் மற்றும் நியமங்கள் வாரியம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான சேவையைப் பெறுவதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட வணிக வங்கித் துறைகள் ஆகும்.
ஆன்லைன் வங்கி சேவையில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள்
ஆன்லைன் வங்கியில் உள்ள பாதுகாப்பு அபாயங்களைப் பற்றிக் கருத்து தெரிவித்த அவர், "தனிப்பட்ட தகவல்களின் திருட்டு, ஏடிஎம்களின் மோசடிப் பயன்பாடு, நிகர வங்கி மோசடி, ஏடிஎம் / டெபிட் கார்டு சம்பவங்கள் அல்லது வங்கி சேவையகங்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல்களின் பல சம்பவங்கள் உள்ளன. இதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் சரிபார்க்க வேண்டும்.
குறைந்தபட்ச சராசரி நிலுவைத் தொகை
"குறைந்தபட்ச சராசரி நிலுவைத் தொகையை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்குச் சுயநிர்ணயம் வழங்கப்பட்டாலும் அல்லது பிரீமியம் சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், சேவையை மறுக்க அல்லது பொதுமக்களைத் தவிர்க அனுமதிக்கக்கூடாது," என்று முத்ரா தெரிவித்தார்.
மத்திய வங்கி
பாங்க் புக் அல்லது அறிக்கையில் பல்வேறு பரிமாற்றங்களைப் பொருத்து அத்தியாவசிய குறைந்தபட்ச பொருத்தமான விவரங்களை வழங்கும் வங்கிகளுக்கு அதன் வழிகாட்டுதல்களை மீண்டும் வலியுறுத்தும் பணியில் மத்திய வங்கி உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications