2016-2017 நிதி ஆண்டின் 4 வது காலாண்டு அறிக்கியில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 61 சதவீதமாகச் சரிந்துள்ளது . சென்ற நிதி ஆண்டின் 4 காலாண்டில் இது தான் மிகவும் குறைவு ஆகும்.
அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள் என்றால் அது கட்டுமானமும், நிதி சேவைகளும் ஆகும்.
வளர்ச்சி புள்ளிவிவரங்கள்
மறைமுக வரிகள் இல்லாமல், வளர்ச்சி புள்ளிவிவரங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் நிகர மறைமுக வரிகள் ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் 4வது காலாண்டில் 5.6% மட்டுமே அதிகரித்தது - புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி எட்டுக் காலாண்டுகளில் இதுவே அதிகபட்ச சரிவாகும்.
விவசாயத்தில் வளர்ச்சி
செல்லா ரூபாய் நொட்டின் பாதிப்பு தான் இந்தச் சரிவு என்பது எண்களைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகின்றது, அதே நேரம் விவசாயம் மற்றும் அரசு செலவு செய்தல் உள்ளிட்டவற்றில் நல்ல வளர்ச்சி உள்ளது. 4 வது காலாண்டில் கூட்டப்பட்ட மொத்த மதிப்பில் விவசாயம் மற்றும் அரசு செலவினங்களை நீக்கினால் 3.8 சதவீதமாக உள்ளது. இது 1 வது காலாண்டில் பெற்ற 8.4 சதவீதத்துடன் ஒப்பிடும் போது பெறும் சரிவாகும்.
மூன்று வருட சரிவு
2017-ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் மூன்று வருடம் இல்லாத அளவிற்குச் சரிந்து 7.1 சதவீதமாக உள்ளது. இதுவே அதற்கு முந்தை வருடம் 8 சதவீதமாக இருந்தது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிலைப்பாட்டை இப்போது மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ரெப்போ விகிதத்தைக் குறைக்கவில்லை என்றாலும் பணவியல் கொள்கை குழு ஜூன் 7ம் தேதி சந்திக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கும்?
நடப்பு நிதி ஆண்டில் கண்டிப்பாகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.50 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் நம்பிக்கையில் உள்ளது.
உலக வங்கி கருத்து
செல்லா ரூபாய் நோட்டு மற்றும் நீடித்த முதலீட்டு மீட்பு உள்ளிட்ட காரணங்களினால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2017-2018 நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக உயரும் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது.
2016-2017 நிதி ஆண்டில் 6.8 சதவீதமாக இருந்த உலக வங்கியின் வளர்ச்சி விகிதம் பொருளாதார இந்தியா மேம்பாட்டுப் புதுப்பிப்பில் 7.2 சதவீதமாக உயரும் என்று கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2019-2020 நிதி ஆண்டில் 7.7 சதவீதமாக உயர்ந்து இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications