'டிசிஎஸ்' நிறுவனத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர் இவர்தான்..!

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்-இல் கடந்த வருடம் அதாவது 2016-17ஆம் நிதியாண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பட்டியலை டிசிஎஸ் நிர்வாகம் இந்த வருடமும் வெளியிட்டுள்ளது .

சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களைப் போலவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவிலான சம்பளத்தையும், சம்பள உயர்வையும் தான் டிசிஎஸ் அளித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடம் அதிகம் சம்பளம் வாங்கிய ஊழியர் யார் என்பதையே இப்போது பார்க்கப்போகிறோம்.

சுப்பிரகாஷ் முகோபாதிய

சுப்பிரகாஷ் முகோபாதிய

டிசிஎஸ் நிறுவனத்தின் குளோபல் கருவூலத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் செயலாளராக இருக்கும் சுப்பிரகாஷ் முகோபாதிய இந்த வருடம் கோடி ரூபாய் அளவிலான மொத்த சம்பளத்தைப் பெற்றுள்ளார்.

அவரது அடிப்படை சம்பளம் வருடத்திற்கு 35 லட்சம் ரூபாய்.

 

ராமகிருஷ்ணன் வி

ராமகிருஷ்ணன் வி

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ராமகிருஷ்ணன் வி 2016-17ஆம் நிதியாண்டுக்கு சுமார் போனஸ், சம்பளம் என அனைத்தையும் சேர்த்து 2.36 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்றுள்ளார்.

டிசிஎஸ் வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி இவரது அடிப்படை சம்பளம் 43 லட்சம் ரூபாய்.

 

ஆர்த்தி சுப்ரமணியம்

ஆர்த்தி சுப்ரமணியம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஆர்த்தி சுப்ரமணியம் 2016-17ஆம் நிதியாண்டுக்கு 3.71 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இவரது அடிப்படை சம்பளம் 81.5 லட்சம் ரூபாய்.

 

என்ஜி சுப்ரமணியம்

என்ஜி சுப்ரமணியம்

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடர் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தலைமை செயல் அதிகாரியான என்ஜி சுப்ரமணியம் இந்த வருடம் 6.15 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இதில் 3.5 கோடி ரூபாயை கமிஷனாகவும், 76 லட்சம் ரூபாயை அடிப்படை சம்பளமாகவும் பெற்றுள்ளார் என்ஜி சுப்ரமணியம்.

 

ராஜேஷ் கோபிநாத்

ராஜேஷ் கோபிநாத்

டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவான ராஜேஷ் கோபிநாத், 6.2 கோடி ரூபாயை 2016-17ஆம் நிதியாண்டுக்கான சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இதில் 4 கோடி ரூபாய் கமிஷனாகவும், 66.5 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளமாகவும் பெறுகிறார் ராஜேஷ் கோபிநாத். இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் 2001ஆம் ஆண்டுச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என் சந்திரசேகரன்

என் சந்திரசேகரன்

டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான என் சந்திரசேகரன் தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஆகப் பதவி வகித்தாலும், 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 11 மாதம் அதாவது பிப்ரவரி மாதம் வரை டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இந்த 11 மாதத்திற்குச் சந்திரசேகரன் சுமார் 30 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இதில் 25 கோடி ரூபாய் கமிஷனாகவும், 2.4 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 2.7 கோடி ரூபாய் கொடுப்பனவாகவும் பெற்றுள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+