கடந்த ஒரு மாதமாக ஐடி நிறுவனங்களின் பணிநீக்கம், செலவின குறைப்பு, ஆட்டோமேஷன் எனப் பிரச்சனைகளை மட்டுமே இருந்த நிலையில், தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் மூலம் அடுத்த 6 மாதத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாகத் தீர்ந்து சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து ஊழியர்களின் பணிநீக்கத்தை மட்டுமே சந்தித்து வந்த ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்தக் கணிப்பு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
6 மாதம் மட்டுமே
இந்திய வேலைவாய்ப்பு சந்தை அடுத்த 6 மாதத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறையாக மட்டுமே இருக்கும், காரணம் அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் அதிகளவில் செய்யப்பட்டு உள்ள காரணத்தால் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வயாப்பு
அதேபோல் பிரஷ்ஷர்கள், மிட்லெவல் ஊழியர்களுக்கு அடுத்த 6 மாத காலத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சில பெரிய நிறுவனங்களில் மட்டுமே உயர் அதிகாரிகள் மற்றும் CXO அளவில் பணிகள் கிடைக்கும்.
இதனால் ஐடித் துறை மட்டுமல்லாமல் பிற அனைத்துத் துறை சார்ந்த ஊழியர்களும் இது ஒரு நல்ல வாய்ப்பு.
2ஆம் தர நகரங்கள்
அதேபோல் இந்த 6 மாத காலத்தில் இந்தியாவில் 2ஆம் தர நகரங்கள் அதாவது கோயம்புத்தூர், மைசூர் போன்ற நகரங்களில் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் என வேலைவாய்ப்பு சந்தை ஆய்வு கூறுகிறது.
முக்கியத் துறைகள்
அடுத்த 6 மாத காலத்தில் இந்தியாவில் சில முக்கியத் துறைகள் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்திக்க உள்ளது, இதில் ஸ்டார்ட்அப், டெலிகாம், பிபிஓ ஆகியவற்றுடன் ஐடி துறையும் உள்ளது.
இதனால் ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்தாலும் மனம் தளரவேண்டாம் சந்தையில் தேவை அதிகமாக உள்ளது.
6 மாதத்திற்குப் பின்
இதேபோல் அடுத்த 6 மாத்திற்குப் பின் அதாவது 2018ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் ஐடி மற்றும் இன்ஜினியர்ங் வேலைவாய்ப்புகள் அதிகளவில் சந்தையில் உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இக்காலகட்டத்தில் ஐடி மற்றும் இன்ஜினியர்ங் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், நிதியியல் சேவை, ஹெல்கேர், பார்மா மற்றும் கேபிஓ ஆகிய துறைகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும் எனத் தெரிகிறது.
எல்லாம் சரியாகிவிடும்...
ஐடி ஊழியர்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனை எல்லாம் வெறும் 6 மாதத்திற்கு மட்டுமே. அதன் பின்னர்ச் சந்தை முழுமையாகச் சீரடைந்து இயல்பான நிலைக்குத் திரும்பும் என்பது உறுதி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications