இந்தியாவைப் பொருத்த விரை பெட்ரோல் விலை ஏறினாலும் இறங்கினாலும் அது நடு இரவு முதல் தான் மாறுகின்றது. நாம் அன்மையில் பெட்ரோல், டீசல் விலை மும்பையில் அதிகமாக உள்ளது என்றும் அதே போன்ற ஒரு நிலை தமிழகத்திலும் வர வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தோம்.
இப்படிப்பட்ட சூழலில் நேற்று இரவு முதல் பெட்ரோ விலை நாடு முழுவதும் 1 ரூபாய் 23 பைசாவும், டீசல் விலை 89 பைசாவும் விலை ஏறியது. இதனால் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 66.91 ரூபாய் எனவும் டீசல் 55.79 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதே நேரம் பிற மெட்ரோ நகரங்களான சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை எப்படி உள்ளது என்று இங்குப் பார்ப்போம்.
மும்பை
நாட்டிலேயே மும்பையில் தான் இன்றைய தேதியில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 78.44 ரூபாய் எனவும், டீசல் விலை 61.67 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.
கொல்கத்தா
கொல்கத்தாவைப் பொருத்த வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 69.52 ரூபாய் எனவும், டீசல் விலை 58.28 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 69.93 ரூபாய் எனவும் டீசல் 59.22 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.
பெங்களூரு
பெங்களூருவைப் பொருத்த வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71.74 ரூபாய் எனவும் டீசல் 59.40 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மகாராஷ்டிராவில் பெட்ரோல் அதிக விலை.. என்ன காரணம்?
மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க முக்கியக் காரணமாக மாநில அரசின் அதிக வாட் வரி விதிப்பு ஆகும். ஜிஎஸ்டி வரியில் பெட்ரோல், டீசல் விலைக்கு விலக்கு அளித்திருப்பதினால் நாடு முழுவதும் ஒரே பெட்ரோல் விலை இப்போதைக்குச் சாத்தியம் இல்லை.
தமிழகத்தில் ஏன் பெட்ரோல் விலை உயரும்?
மகாராஷ்டிரா போன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை உயரும் என்பதற்கான காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுவதால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் போது பெட்ரோ, டீசல் மீதான வாட் வரியை உயர்த்தும் போது விலை உயரும்.
சென்ற மாதம் பெட்ரோல் விலை ஏன் குறைந்தது?
மே 16 ஆம் தேதி ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் உலகச் சந்தையில் கச்ச எண்ணெய் விலையின் வீழ்ச்சி காரணமாகப் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 2.16 மற்றும் ரூபாய் 2.10 குறைக்கப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications