கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்ற சட்டம் தொடர்ந்தால் இந்திய சந்தையில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான எலும்பு உணவு மற்றும் ஜெலட்டின் தொழில் பாதிக்கப்படும்.
எலும்பு சந்தையில் பெரிதளவில் வளர்ந்துள்ள நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்பது பல வணிகங்களைப் பாதிக்கும் என்றனர்.
அதுமட்டும் இல்லாமல் எந்தப் பயனும் இல்லாத கால்நடைகளை விவசாயிகள் வைத்திருப்பதினால் அவர்களுக்கான பொருளாதாரச் சுமைகள் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
எதற்காக எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றது
இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளில் இருந்து பெறப்படும் எலும்புகள் மற்றும் பிற கழிவுகள் எழும்பு உணவுகளாக உரங்களாகவும், கோழிப்பண்ணைகளில் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
மருத்துவத் துறையில் எலும்புகள்
எலும்புகள் ஜெலட்டின் உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாகவும், இது மருந்து துறையில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், இறைச்சிக்காகக் கால்நடைகளைப் பயன்படுத்தாவிடின் எழும்புத் தொழிற்துறை பெறும் அளவில் பாதிக்கப்படும் என்று உத்திரப் பிரடேசத்தில் உள்ள எழும்பு பொருட்கள் தயாரிப்பாளர் ஜரிஃப் குரேஷி கூறினார்.
தடையை நீக்க வேண்டும்
கால்நடைகளின் எலும்பை நம்பி தான் இந்தத் தொழில்துறை இருப்பதினால் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கழிவு என்றும் ஏதுவும் இல்லை
மாடுகள் மற்றும் எருமைகளின் உடல்களிலிருந்து, எந்தப் பகுதியும் கழிவுப்பொருளுக்குப் போவதில்லை. விலங்குகளின் கொம்புகள் ஆடைத் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் பொத்தான்களாகப் பயன்படுத்துகின்றன.
பிற்போக்கான நடவடிக்கை
கோவா மாமிசம் வளாகத் துறையின் முன்னால் இயக்குனர் டாக்டர் பெஞ்சமின் பிரகான்சா மத்திய அரசின் இந்த முடிவு மிகவும் பிற்போக்கான நடவடிக்கை என்றும் கால்நடை வர்த்தகத்தின் இயக்கவியல் கொள்கைகளைக் கருத்தில் கொள்ளாதது தவறு என்றும் கூறினார்.
விவசாயிகளுக்கு மூலதனம்
கால்நடை விலங்குகள் உற்பத்தித் திறன் இல்லாத போது இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றது. இதனால் விவசாயிகளுக்குப் புதிய கால்நடை விலங்குகளை வங்க மூலதனம் கிடைக்கின்றது, அதனால் தடை சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
கோவா மாமிச வளாகம்
கோவா மாமிச வளாகம் மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்து நடத்தி வருகின்றன.
மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் ஜெலிட்டின்
விலங்கு மருத்துவரான பர்கான்சா கால்நடைகளில் இருந்து இயற்கை முறையில் எடுக்கப்படும் ஜெலிட்டின் மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகின்றது என்றும், சிந்தட்டிக் மருந்துகள் பெறும் அளவில் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், இயற்கையான முறையில் பெறப்படுவதே மனிதர்களுக்கு ஏற்றது என்றும் கூறினார்.
உரத்துறை
வேளாண் நிபுணர் ஜகதீஷ் சுங்கட்குக் கூறுகையில், எலும்பு சார்ந்த உரங்கள் மண்ணின் பாஸ்பேட் மற்றும் கால்சியம் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன என்கிறார்.
மன்னின வளத்தைப் பாதிக்கும்
புதிய விதிகள் மன்னின வளத்தைப் பெறும் அளவில் பாதிக்கும் என்றும் இதனால் ஆடு, கோழி போன்றவற்றை நாடிச் செல்லும் போது விலை அதிகரிக்கும் என்றும் ஆடுகள் மற்றும் செம்மறியாடுகள் அனைத்து வகையான பச்சை தாவரங்களையும் சாப்பிடுகின்றன, அவை நிலத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கும். மனிதன்-மிருக மோதல்கள் கூட உயரும், அவர் கூறினார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications