தி சென்னை சில்க்ஸ்: ஒரு வெற்றி சகாப்தம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குத் தியாகராய நகரில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் இழப்புதான். இது சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் அல்ல அதனைச் சுற்றி உள்ள பிற கடைகள் மற்றும் இவர்களுக்குப் பொருட்களைச் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் இழப்பு தான்.

 

தென் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளிக் கடை சாம்ராஜியமாக வளர்ந்து உள்ளது சென்னை சில்க்ஸ். தினமும் 30,000 முதல் 40,000 நபர்கள் வரை சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக வருகின்றனர்.

பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

தமிழ் நாடு, கேரளா, ஆந்திர பிரேதம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களிலும் தங்களது கடைகளைச் சென்னை சிக்ஸ் நிறுவனம் நிறுவியுள்ளது. இவர்களது அனைத்து கடைகளிலும் குறைந்தது தினமும் 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கின்றது.

புடவை ரகங்கள்

புடவை ரகங்கள்

பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஆடைகள் இங்குக் கிடைக்கும். சென்னை சில்க்ஸ் நிறுவனம் திருமணப் புடவைகள், டிசைனர் புடவைகள், காட்டம் புடவைகள், சில்க் புடவைகள் மற்றும் பிற ரகங்களைத் தங்களது கடைகளில் விற்பனை செய்து வருகின்றது.

தினசரி புடவை விற்பனை

தினசரி புடவை விற்பனை

சென்னை சில்க்ஸ் தினமும் 3000 முதல் 4000 புடவைகள் வரை விற்பனை செய்கின்றது. இது வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறும், பிரத்தியேகமாகவும், நேர்த்தியாகவும், தனித்துவமாக இங்கு உள்ள சேகரிப்புகளே காரணமாகும்.

பின்னணி தயாரிப்புகள்
 

பின்னணி தயாரிப்புகள்

இவை மட்டும் இல்லாமல் ஸ்பின்னிங் மில்கள், பின்னுதல், அச்சிடுதல், எம்பிராய்டரி மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றவற்றையும் தங்களது பின்புலமாகச் சென்னை சில்க்ஸ் வைத்துள்ளது.

காற்றாலை

காற்றாலை

சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் 80 மெகா வாட்ஸ் வரை காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரிவும் உள்ளது. இதன் மூலம் தங்களது பின்னலாடை நிறுவனங்களுக்குத் தங்கு தடையின்றி மின்சாரம் பெறுகின்றது.

வெளிநாட்டுச் சந்தை

வெளிநாட்டுச் சந்தை

இவர்களது ரிடெய்ல் பிரிவுக்கு இவர்களது பிற பிரிவுகளிலிருந்து மட்டும் 20 சதவீதம் தேவை பூர்த்திச் செய்யப்படுகின்றது.

உள்நாட்டுச் சந்தை மட்டும் இல்லாமல் பிற வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் இவர்களது பின்னலாடை ஆலைகளில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறுகின்றது.

பிராண்டட் ஆடைகள் தயாரிப்பு

பிராண்டட் ஆடைகள் தயாரிப்பு

மார்க்ஸ் & ஸ்பென்சர், டிஸ்னி, ஹேன்ஸ், டகத்லான், ரால்ப் லாரன் ஜே.சி. பென்னி, வால்மார்ட், கேர்ஃபோர் மற்றும் பல பிராண்டுகளுக்கும் இவர்கள் ஆடைகளைத் தயார் செய்கின்றனர். இந்தப் பிரிவு மட்டும் ஆண்டிற்கு 350 கோடி ரூபாய் வரை வருவாய் அளிக்கின்றது.

சந்தேகமே இல்லாமல் சென்னை சிக்ஸ் நிறுவனத்தின் பிற பிரிவுகள் எல்லாம் ஜவுளி வணிகத்தைச் சார்ந்ததாகவே உள்ளது.

ஐடி பிரிவு

ஐடி பிரிவு

சென்னை சிக்ஸ் நிறுவனத்தின் பிற பிரிவுகளில் ஐடி பிரிவும் ஒன்று. ஆம் இவர்களுக்குத் தேவையான மென்பொருள்களை இவர்களே தயாரித்துக்கொள்கின்றனர். இந்த ஐடி பிரிவின் மூலமாக விநியோகச் சங்கிலி மேலாண்மை, பில்லிங், மற்றும் பிற தேவைகளைப் பூர்த்திச் செய்துள்ளனர்.

ஸ்ரீ குமரன் தங்க மாளிகை

ஸ்ரீ குமரன் தங்க மாளிகை

ஜவுளித் துறை மட்டுமில்லாமல் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்ற பெயரில் தங்க நகை கடையையும் சில நகரங்களில் நிறுவியுள்ளனர்.

பூர்வீகம்

பூர்வீகம்

சென்னை சிக்ஸ் வேட்டி நெசவாளர் குழந்தைவேல் முதலியார் என்பவரால் திருப்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் துவங்கப்பட்டது.

முதல் ஷோரூம்

முதல் ஷோரூம்

1962-ம் ஆண்டு முதன் முதலாகக் குழந்தைவேல் முதன் முதலாக மதுரையில் காதி பொருட்களை விற்பனை செய்வதற்கான 100 சதுர அடிக்கொண்ட கடையைத் திறந்துள்ளார். அடுத்தச் சில ஆண்டுகளில் இது 12 கடைகளாக உருவெடுத்தது.

1978-ம் ஆண்டு முதன் முதலாகப் பல பிராண்ட் ஷோரூம்oஒன்றை திருப்பூரில் துவங்கப்பட்டது, பின்னர் ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் துவங்கப்பட்டது. இதற்கு எல்லாம் குமரன் சில்க்ஸ் என்று பெயரும் சுட்டப்பட்டது.

சென்னை சில்க்ஸ்

சென்னை சில்க்ஸ்

2000-ம் ஆண்டுச் சென்னை 125,000 சதுர அடியில் இவர்களது 8 மகன்களால் சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையைத் துவங்கினர். ஆனால் இவர்களுக்கு ஏற்கனவே குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் சென்னையில் ஜவுளிக் கடை இருந்தது.

இணையதளம்

இணையதளம்

சென்னை சில்க்ஸ் மட்டும் இல்லாமல் இணையதளம் மூலமாகப் பொருட்களை விற்பனை செய்யும் பிரிவும் துவங்கப்பட்டது.

கடன் வாங்கும் பழக்கம் இல்லை

கடன் வாங்கும் பழக்கம் இல்லை

சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தைப் பொருத்த வரை நிறுவனத்தின் முதலீட்டிற்காகக் கடன் வாங்கும் பழக்கம் கிடையாது என்பது ஒரு சிறப்பு ஆகும்.

இன்றைய நிலை

இன்றைய நிலை

ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு வளர்ச்சி அடைந்து சென்ற சென்னை சில்க்ஸ் இன்று 1,20,0000 சதுர அடியில் கடைகளை நிறுவி வணிகம் செய்து வருகின்றது. மிச்சத்தை வரலாறு தான் சொல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Succsess story of Chennai silks in Tamil

Succsess story of Chennai silks in Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X