ஊழியர்களை என்ன தான் வேலையை விட்டு நீக்கினாலும் இந்திய டெக் நிறுவனத்தின் தலைவர்களின் சம்பளம் மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் லாபம் சரிந்து நிறுவனத்தின் தலைவரின் சம்பளம் தான் அதிகம்.
என்ன நம்ப முடியவில்லையா? ஆம், நிறுவனம் நட்டம் அடைந்தாலும் இல்லை என்றாலும் அந்த நிறுவனத்தின் தலைவர்களின் சம்பளம் மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே நாம் இங்கு இந்திய டெக் நிறுவனங்களில் அதிகச் சம்பளம் பெறும் நிறுவன தலைவர்கள் யார் என்ற இங்குப் பார்ப்போம்.
குருநானி
டெக் மகேந்திரா நிறுவனத்தின் சிஈஓ குருநானி 2015 -ம் ஆண்டு 165.6 கோடி ரூபாயும், இதுவே 2016 நிதி ஆண்டு 208.4 கோடிகள் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
வினித் நாயர்
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை டெக் மகேந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த வினித் நாயர் 179.5 கோடிகள் சம்பளமாகப் பெற்றுள்ளார். பின்னர் 2016-ம் ஆண்டு இவரது சம்பளம் 299.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விஷால் ஷிக்கா
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் ஷிக்கா 2015-ம் ஆண்டு வரை 5.7 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்று வந்துள்ளார். பின்னர் 2016-ம் ஆண்டு இவரது சம்பளம் 48.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடராஜன் சந்திரசேகரன்
இந்தியாவின் மிகப் பெரிய டெக் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைவராக இருந்த போது நடராஜன் சந்திரசேகரன் 2015-ம் ஆண்டு 21.3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இதுவே 2016-ம் ஆண்டு 25.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டிகே குரியன்
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான டிகே குரியன் 2015-ம் ஆண்டு வரை 9.1 கோடி ரூபாயும், 2016-ம் ஆண்டு 13.7 கோடி ரூபாயும் சம்பளமாகப் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications