ஐடி ஊழியர்களே கவலைப்பட வேண்டாம்.. இந்த தொழில்நுட்பத்தில் 85,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியை வீட்டு நீக்கும் அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் பல தொழில்நுட்பங்கள் புதிதாக வந்துகொண்டே தான் இருக்கின்றன.

ஆடோமேஷன் போன்றவற்றால் ஐடி மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலையில் ஐடி துறையில் ஆடோமேஷனையும் தாண்டி பிற தொழில்நுட்பங்கள் தெரிந்து இருந்தால் கண்டிப்பாக வேலை உண்டு.

இதற்காக ஐடி ஊழியர்கள் எந்த மாதிரியான தொழில்நுட்பங்களை எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.

அன்மை காலங்கள் மிக வேகமாக வளரிந்து வரும் தொழில்நுட்பங்கள்
 

அன்மை காலங்கள் மிக வேகமாக வளரிந்து வரும் தொழில்நுட்பங்கள்

DevOps தெரிந்தவர்களுக்குக் கடந்த சில வருடங்களாக 109 சதவீதம் வரை வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரம் கிளவுட் ரோஸ் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் 70 சதவீதமும், பிக் டேட்டா மற்றும் டேட்டா சையின்ஸ் தெரிந்தவர்களுக்கு 60 சதவீதம் மற்றும் 45 சதவீதம் அளவிலான வேலை வாய்ப்பு வளர்ச்சி அதிகரித்துள்ளது.

கிளவுட் கம்ப்யூட்டிங்

கிளவுட் கம்ப்யூட்டிங்

கிளவுட் கம்ப்யூட்டிங் தெரிந்தவர்களுக்குக் கிளவுட் இஞ்சினியர், DevOps இஞ்சினியர், Azure/AWS கன்சல்டண்ட், கிளவுட்/ Azure ஆர்க்கிடெக்ட் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் கிடைக்கின்றது.

பிக் டேட்டா மற்றும் டேட்டா சயின்ஸ்

பிக் டேட்டா மற்றும் டேட்டா சயின்ஸ்

அட்மிமிஸ்ட்ரேட்டர், ஆர்க்கிடெக்ட், டேட்டா சயிண்டிஸ்ட், டைரெக்டர்,இஞ்சினியர் உள்ளிட்ட பணிகள் பிக் டேட்டா மற்றும் டேட்டா சயின்ஸ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பினை அளிக்கின்றது.

சைபர் செக்யூரிட்டி

சைபர் செக்யூரிட்டி

செக்யூரிட்டி ஆடிட்டர் இன்ஃபர்மேஷன், செக்யூரிட்டி மேனேஜர்/இஞ்சினியர், சைபர் செக்யூரிட்டி ஆர்க்கிடெக்ட் உள்ளிட்ட பணிவாப்புகள் சைபர் செக்யூரிட்டி தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்.

ஐடி துறை
 

ஐடி துறை

இந்தியாவில் 3 மில்லியன் ஊழியர்கள் ஐடி துறையில் பணிபுரிகின்றனர். இப்போது பணி நீக்க அறிவிப்பு அதிகளவில் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்தத் தொழில்நுட்பங்களில் உங்களது திறனை வளர்த்துக்கொண்டால் உங்கள் வேலை அவ்வளவு சுலபமாக்க இழக்க நேரிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT Professionals Rush To Reskill As 85,000 Jobs Open Up In New Technologies

Indian IT Professionals Rush To Reskill As 85,000 Jobs Open Up In New Technologies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X