நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தனது சராசரி எண்ணிக்கையிலான விசா விண்ணப்பங்களில் வெறும் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே விண்ணப்பித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் பல ஊழியர்களின் அமெரிக்கா கனவு தவிடுபொடியாகியுள்ளது.
அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் மற்றும் வர்த்தக விதிமுறைகளின் மாற்றங்களின் காரணமாக இத்தகைய மாற்றங்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது.

அதன் மூலம் அமெரிக்கச் சந்தையில் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறைக்காக டிசிஎஸ் நிறுவனம் அங்கு இருக்கும் பொறியியல் கல்லூரி மற்றும் பிஸ்னஸ் ஸ்கூல்-களில் இருந்து பட்டதாரிகளைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது டிசிஎஸ்.
இதற்காக அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 கல்லூரிகளை டிசிஎஸ் நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது.
அமெரிக்காவைப் போல் இந்திய ஐடி நிறுவனங்கள் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பிரச்சனை சந்தித்து வரும் காரணத்தால் வர்த்தகத்திற்காவும், சரி ஆட்களைப் பணியில் அமர்த்துவதிலும் சரி அதிகளவிலான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தைப் போலவே இன்போசிஸ் நிறுவனம் இதேபோன்ற நடவிடிக்கையைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications