இந்த நிறுவனத்திற்கு ரொம்ப பெரிய மனசு..!!

உலகில் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல காரணங்களுக்காக பெரும் தொகையை நன்கொடையளித்து வருகிறது. இத்தகைய மனிதநேயம் மிக்க நிறுவனங்கள் என உலகெங்கிலும் வியாபித்திருக்கும் பொன்னான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதன் மூலம் கார்பரேட் நிறுவனங்களில் சில நல்ல நிறுவனங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் இத்தகைய கார்பரேட் நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு பின் மறைக்கப்பட்ட நோக்கம் உள்ளது மற்றும் தங்கள் நிறுவன பெயரை புதுப்பிப்பதற்கான முயற்சிதான் இது என விமர்சிக்கப்பட்ட போதிலும், உண்மையில் முன்னர் இருந்ததை விட மிக அதிகமாக மனிதநேயத்திற்கான முயற்சி நடக்கிறது என்பது தான் உண்மை.

உலகளாவிய 10 சிறந்த பெருந்தன்மை மிக்க மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குவதில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களைத் தெறிந்து கொள்வோம்

10. சிட்டி குரூப்

10. சிட்டி குரூப்

பண பங்களிப்பு: $ 142.8 மில்லியன்

தொழில்: வங்கி, நிதி சேவைகள்

நிறுவன வலைத்தளத்தின்படி, சிட்டி குரூப்பின் தொண்டு நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதையும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் சமூகங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் அடங்கும் முயற்சிகள் நிதியுதவி பெறல் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை. சமீபத்தில், டைட்டன் நிதி சேவைகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை இணைக்க உதவும் விதத்தில் மூன்று வருட இடைவெளியில் 50 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.

 

9. கூகுள்

9. கூகுள்

பண பங்களிப்பு: $ 167.8 மில்லியன்

தொழில்: இணையம்; கணினி மென்பொருள், கணினி வன்பொருள்

கூகுளின் மனிதநேய முயற்சிகள், சமூக பிரச்சனைகளுக்கு அடித்தளமாக மற்றும் வழக்கத்திற்கு மாறான தீர்வை வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துவதாகும். இந்த நிறுவனம் ஒரு செயல்திறன் மிக்க மனிதநேய தொண்டு புரியும் நிறுவனமாக இருந்து வருகிறது, உலகெங்கிலும் பல காரணிகளுக்கு 167.8 மில்லியன் டாலர் ரொக்க நன்கொடைகளை நன்கொடையளித்துள்ளது.

கூகுள் ஊழியர்களும் அதன் சேவைகளில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில், அதன் ஊழியர்கள் உலகெங்கிலும் 9,000 க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு $ 21 மில்லியன் நன்கொடையாக வழங்கி உள்ளனர். ஏழைகளுக்கு பணத்தை நேரடியாக வழங்குவதன் மூலம் வறுமை ஒழிக்க ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு வழங்கிய $ 2.4 மில்லியன் மானியம் மற்றும் குற்றவியல்-நீதி சீர்திருத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலர் மானியம் ஆகியவை அதன் சமீபத்திய தொண்டு முயற்சிகள்.

 

8. பாங்க் ஆஃப் அமெரிக்கா

8. பாங்க் ஆஃப் அமெரிக்கா

பண பங்களிப்பு: $ 168.5 மில்லியன்

தொழில்: வங்கி மற்றும் நிதி சேவைகள்

பலவிதமான தொண்டு நிறுவனங்களுக்கு டிரஸ்டீ அல்லது கோ- டிரஸ்டீ யாக பணியாற்றி வருகின்ற நிலையில், பாங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனம் மனிதநேயத் துறையில் ஒரு தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஒவ்வொரு நன்கொடையாளரின் தொண்டு நோக்கத்துக்கு இணங்கி இவ்வங்கி மானியங்களை வங்கி வழங்குகிறது.

பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் குறைவான சலுகைகள் கொண்ட அடிப்படை தேவைகளை தருவதில் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2014 இல், இது கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்களை தொழிலாளர்களின் கல்விக்காகவும், 33 மில்லியன் டாலர்களை சமூக அபிவிருத்திக்காகவும், உணவு வழங்குவதிலும் மற்றும் அவசர நிவாரணம் அளிப்பதற்கும் செலவு செய்தது.

 

7. ஜே.பி. மார்கன் சேஸ்

7. ஜே.பி. மார்கன் சேஸ்

பண பங்களிப்பு: $ 224 மில்லியன்

தொழில்: நிதி சேவைகள்

JP மார்கன் சேஸ் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அதன் மனிதநேயத் தொண்டுக்கு ஒரு வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையை பின்பற்றி வருகின்றனர். இந்த நிதி சேவைகள் நிறுவனத்தின் தொண்டு நடவடிக்கைகள் தொழிலாளர்களின் புதிய திறன்களை உயர்த்துவது, தனிநபர்களுக்கு நிதி திறனை வளர்க்க உதவுவது, சிறு தொழில்களின் வளர்ச்சியை ஆதரிப்பது, மற்றும் அதன் ஹோஸ்ட் கம்யூனிட்டியின் வளர்ச்சிக்கு உதவுவது ஆகியவை. 2016 ஆம் ஆண்டில் மட்டும் $ 200 மில்லியனுக்கும் மேலாக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்திற்கும், வேறு 40 நாடுகளில் உள்ள இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் வழங்கியது.

 

6. செவ்ரோன்

6. செவ்ரோன்

பண பங்களிப்பு: $ 225 மில்லியன்

தொழில்: எண்ணெய் மற்றும் எரிவாயு

மனிதநேயத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் மற்ற உயர்மட்ட நிறுவனங்களைப் போலன்றி, செவ்ரோனின் மனிதநேய நடவடிக்கைகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இருப்பினும்கிரானிக்கல் ஆஃப் பிலாந்த்ரோஃபியின், ஒரு அதிகாரப்பூர்வ ஆதாரப்படி, செவ்ரோனின் மனிதநேய நடவடிக்கைகள் எண்ணெய் விலையில் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் நன்கொடைகளை 2014 ல் 7.2% வீழ்ச்சியடைந்தன. நிறுவனத்தின் தொண்டு முயற்சிகள் பெரும்பாலும் பின்வருவனவற்றை மையமாக கொண்டுள்ளன: லத்தீன் அமெரிக்காவில் பெண்களின் பொருளாதார மேம்பாடு, ஆப்பிரிக்க நாடுகளில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் சிகிச்சை மற்றும் இளைஞர்களுக்கான ஸ்டெம் கல்வி.

 

 

5. எக்ஸான்மொபில்

5. எக்ஸான்மொபில்

பண பங்களிப்பு: $ 268 மில்லியன்

தொழில்: எண்ணெய் மற்றும் எரிவாயு

எக்ஸான்மொபில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் தொண்டுபுரிவதில் ஒரு முன்னணி நிறுவனம். நிறுவனத்தில் அதன் பெருநிறுவன நன்கொடை 2015 ஆம் ஆண்டின் 13% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் பெருமளவிலான முயற்சிகள் 3 முக்கிய பகுதிகளை சுற்றி உள்ளது: ஸ்டெம் கல்வி (குறிப்பாக பெண்கள் மற்றும் குமரிகள்), சுகாதாரம், மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை. மேலும் குறிப்பாக, அதன் தொண்டு கணித மற்றும் விஞ்ஞான கல்வியை ஆதரிக்கிறது, "பெண்கள் பொருளாதார மேம்பாடு", மேலும் மலேரியாவை ஒழிப்பதிலும் இந்நிறுவனம் உறுதியுடன் உள்ளது.

 

4. கோல்ட்மேன் சாக்ஸ்

4. கோல்ட்மேன் சாக்ஸ்

பண பங்களிப்பு: $ 276.4 மில்லியன்

தொழில்: நிதி சேவைகள்

2008 ஆம் ஆண்டின் உலக நிதி நெருக்கடிக்குப் பின்னர், கோல்ட்மேன் சாக்ஸின் தொண்டு நிறுவனங்களுக்கான பணிகள் ஒரு பெருந்திருப்பத்தைக் கண்டது . இந்நிறுவனம் இதுவரை $ 1.6 பில்லியனை உலகெங்கிலும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதுடன், 80 நாடுகளில் ஆயிரக்கணக்கான இலாப நோக்கமற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கார்ப்பரேட் கொடுப்பனவுக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு தெளிவான உதாரணம், 2015 ஆம் ஆண்டில் அதன் இலாபங்களில் 3 சதவிகிதத்தை மனிதநேய தொண்டிற்கு நன்கொடையாக அளித்தது. அது ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களின் சராசரி எண்ணிக்கைக்கு மேலானதாகும். அதன் பிரதான முயற்சியான, "10,000 பெண்கள் மற்றும் 10,000 சிறு வணிகங்கள்" மூலம்,கோல்ட்மேன் சாச்ஸ் உலகம் முழுவதும் பெண் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு கடன், வணிக கல்வி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கியுள்ளது.

 

3. வெல்ஸ் ஃபார்கோ

3. வெல்ஸ் ஃபார்கோ

பண பங்களிப்பு: $ 281.3 மில்லியன்

தொழில்: வங்கி, நிதி சேவைகள்

வெல்ஸ் ஃபார்கோ நிதியியல் சேவைகள் துறையில் மிக அதிகமாக நன்கொடை அளித்த நிறுவனமாக முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டில், ஆண்டறிக்கையின் படி வருடாந்திர வருவாயில் 1.2 முதல் 1.5% வரை நன்கொடை அளிப்பதற்கான இலக்கைக் கொண்டிருந்தது. பங்களிப்பு இரண்டு வெவ்வேறு சேனல்கள் மூலம் செய்யப்பட்டது: ஒரு பகுதியினர் உள்ளூர் சமூகங்களில் இயங்கவும் மற்றொன்று தேசிய மட்டத்திலுமாகும். தொண்டு நிறுவனத்திற்கான மனிதநேய கடமைப்பாட்டின் ஒரு தெளிவான உதாரணம் $ 25 மில்லியன் நன்கொடையாக நெய்பர்வொர்க்ஸ் க்கு வழங்கப்பட்டது, இது உயர்சிறப்புரிமையற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுக்கும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.

 

2. வால்மார்ட்

2. வால்மார்ட்

பண பங்களிப்பு: $ 301 மில்லியன்

தொழில்: சில்லறை வர்த்தகம்

சமீப காலம் வரை வால்மார்ட்டின் மனிதநேய ஈடுபாடு சிறிய அளவிலான நன்கொடைகளின் விளைவாக, ஒரு கேள்விக்குறியாகவே கருதப்பட்டு வந்தது. இதன் விளைவாக, உலகின் முதன்மையான சில்லறை விற்பனையாளரிடமிருந்து பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.. 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைவராக கேத்லீன் மெக்லாப்ளின் நியமக்கப்பட்டதை தொடர்ந்து வால்மார்ட்டின் மனிதநேயத்தொண்டு ஒரு புதிய திருப்பத்தை கண்டது.

உலகின் மிகப்அதிக பணியாளர்களை கொண்ட நிறுவனமான வால்மார்ட் ,தொழிலாளி திறன்கள் மற்றும் வாழ்க்கைத் தயார்நிலையின் வளர்ச்சி ஆகியவை மனிதநேய நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்துவதோடு, அதன் நிதிஆதரவிலிருந்து நிதிகளை முதலீடு செய்திருக்கிறது. குறைந்தபட்ச ஒரு மணிநேர சம்பளத்தை 9 முதல் 10 டாலர்கள் வரை அதிகரித்ததன் மூலம் நிறுவனம் தனது தொழிலாளர் நலனை மேம்படுத்தவும் செய்தது. பசிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட நிறுவனங்களுக்கு வால்மார்ட் 61 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளது.

 

1. கிலியட் சயின்ஸஸ்

1. கிலியட் சயின்ஸஸ்

பண பங்களிப்பு: $ 446.7 மில்லியன்

தொழில்: மருந்துகள், பயோடெக்னாலஜி

ஆராய்ச்சி சார்ந்த பயோஃபார்மஸூட்டிகல் நிறுவனமான கிலியட் சயின்ஸ், மனிதநேயத்தொண்டில் தீவிர ஈடுபாடு கொண்ட முன்னணி பொது நிறுவனமாகும். கலிஃபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட இந்நிறுவனமானது, தொண்டுசார்ந்த காரணங்களுக்காக மிக அதிகமான பங்களிப்பை செய்துள்ளது, இது 2015 ஆம் ஆண்டு வரை 446.7 மில்லியன் டாலர் பண பங்களிப்பு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் கொடுத்த நிதியைவிட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும், எவ்வாறாயினும், அதன் தொண்டு பெரும்பாலும் அதன் முக்கிய ஆய்வுப் பகுதிகளை நோக்கி உள்ளது, அதிலும், குறிப்பிடத்தக்க வகையில் எச்.ஐ. வி / எய்ட்ஸ் மற்றும் கல்லீரல் நோய் பற்றிய ஆய்வுகளாகும். மேலும், இலாப நோக்கற்ற நிறுவனங்களிலிருந்து வரும் நிதி கோரிக்கைக்கு அள்ளிக் கொடுக்கும் நிறுவனமாக அறியப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+