என்ஆர்ஐ-கள் எங்கே முதலீடு செய்கிறார்கள் தெரியுமா?

தாய்நாட்டை விட்டு வெளியே வேலைக்காக சென்றாலும், சொந்த நாட்டை மறக்காமல் தங்களது சம்பாத்தியத்தை தாய்நாட்டில் முதலீடு செய்து, தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் அந்நிய செலாவணி வருவாய்க்கும் வழி எற்படுத்துகின்றனர்.

இவ்வாறு பணக்காரர்களாக உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பணத்தை தங்கள் தாய்நாட்டின் சொத்து சந்தையில் முதலீடு செய்து நல்ல வருவாயை ஈட்டி வருகின்றனர். ஆனால், அவர்களின் முதலீட்டு முடிவுகள் வெறும் பணப்யன்களை மட்டுமே நோக்கமாக கொண்டவை அல்ல என்பது புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பெரும்பான்மையான வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் முதலீடுகளால் பெறும் பிற்கால பணப்பயன்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தாய்நாட்டில் செய்ய விரும்புவது அவர்களின் முதலீடுகள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 78% பேர் தங்களின் உள்ளூர்களில் முதலீடு செய்வதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் சொத்துக்கள் மீதான முதலீடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சில அம்சங்களைப் பற்றி இங்கே காண்போம்:

இரண்டாவது நல்லது

இரண்டாவது நல்லது

இரண்டாம் நிலை மாநகரங்களின் ரியல் எஸ்டேட்-இல் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மிகச் சிறந்த முதலீட்டு விருப்பமாக வளர்ந்து வருகிறது. பெரிய நகரங்களின் சொத்து சந்தைகள் மிகக் குறைந்த அளவு நம்பிக்கையை அளித்து வரும் நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஏகோபித்த விருப்பமாக அமைவது வளர்ந்துவரும் நகரங்களில் முதலீடு செய்வதுதான்.

சமீப காலங்களிலிருந்து அஹமதாபாத், கோயம்புத்தூர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் சொத்துக்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

 

குறைவாகவே வைத்திருத்தல்

குறைவாகவே வைத்திருத்தல்

உள் நாட்டில் வசிக்காதவர்களுக்கு அதிக மதிப்பிலான சொத்துக்கள் விருப்பத் தேர்வாக இருந்தாலும் சில சௌகரியக் குறைவுகள் உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் உள்ளூரையே விரும்புவதற்கு காரணம் வீட்டிற்கு அருகாமையில் இருப்பதுதான்.

மேலும், அதிக அசௌகரியங்களின்றி வீட்டிலிருந்தபடியே பராமரிக்க முடியும் என்பதுதான் பிரதான காரணமாக இருக்கும். இந்த காரணத்திற்காகவே, உள்ளூரில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களில் 34 % பேர் இவ்விதமே செய்கிறார்கள்.

 

 

தரம் கவனிக்கப்படுதல்

தரம் கவனிக்கப்படுதல்

மற்ற நாடுகளில் கடும் உழைப்பு செய்து தங்களது தொழிலை நடத்தும் அவர்கள் தங்கள் ஊருக்கு வரும்போது நல்ல தரமான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறார்கள்.

இந்த காரணத்திற்காகவேதான் அவர்கள் சிறிய நகரங்களை தங்களது தேர்வாக வைத்திருக்கிறார்கள். பெரிய நகரங்களில் அன்றாட வாழ்விற்கான செலவு மிக அதிகமாக இருப்பதோடு அதிக மன அழுத்தங்கள் ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன.

 

வீடும் உலகமும்

வீடும் உலகமும்

மற்ற இடங்கள் அதிக வாய்ப்புள்ளதாக இருந்தாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் உள்ளூரிலே சொத்துக்கள் வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற இடங்களில் பசும் புல்வெளிகள் நிறைந்திருந்தாலும், உள்ளூரில் செய்யப்படும் முதலீட்டின் மீதான மதிப்புகளையே 82 % பேர் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அன்னியர்களுக்கு மத்தியில் பெரு வாழ்வு வாழ்ந்த பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு முடிவுகள் தனிப்பட்ட காரணங்களுடன் அதிக மதிப்புள்ளதாகிறது.

 

பெரும் விருப்பங்கள்

பெரும் விருப்பங்கள்

கொச்சி, கோயம்புத்தூர், பெங்களுரு, சென்னை, அஹமதாபாத், ஹைதராபாத், திருவனந்தபுரம், சண்டிகர், புனே மற்றும் மும்பை நகரங்கள்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் விருப்ப முதலீட்டுத் தேர்வுகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திரைகடலோடி தேடிய திரவியம் தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்று உண்மையான மண்ணின் மைந்தர்கள் எண்ணுவது இயல்புதானே.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+