நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான விப்ரோ மென்பொருள் துறையில் மட்டும் பல பிரிவுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. பல்வேறு காரணங்களால் விப்ரோ நிறுவனத்தின் 2016-17 நிதியாண்டுக்கான வருவாய் மற்றும் லாப அளவுகள் அதிகளவில் குறைந்தது.
மேலும் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பிரிவு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் வளர்ச்சியில் பெரிய அளவிலான பின்னடைவை சந்தித்த காரணத்தால் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் சம்பளம் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜி
இந்தியாவின் பணக்காரர் மற்றும் அதிக நன்கொடை அளித்த வர்த்தகத் தலைவராக இருக்கும் அசிம் பிரேம்ஜி விப்ரோ குழுமத்தின் தலைவர் ஆவார்.
2016-17ஆம் ஆண்டுக்கான சம்பளத்தில் அசிம் பிரேம்ஜி கடந்த வருடத்தை விடவும் 63 சதவீதம் குறைவாகப் பெற்றுள்ளார்.
வெறும் 1,21,853 டாலர்
கடந்த வரும் கமிஷன் போனஸாக மட்டமே 1,39,634 டாலர் பெற்ற நிலையில் 2016-17ஆம் நிதியாண்டுக்கு கமிஷன் ஏதுமில்லாமல் வெறும் 1,21,853 டாலர் அளவிலான சம்பளத்தை மட்டுமே பெற்றுள்ளார்.
இந்தச் செய்து இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மென்பொருள் வர்த்தகம்
விப்ரோ குழுமத்தின் மென்பொருள் வர்த்தகத்தில் மார்ச் 31,2017ஆம் முடிவில் இப்பிரிவின் மொத்த லாபத்தின் அளவு 4.7 சதவீதம் வரை குறைந்து 1.3 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்தது.
அபித் அலி நீமுச்வாலா
இந்நிலையில் விப்ரோ மென்பொருள் வர்த்தகத்தின் சீஇஓ-வான அபித் அலி நீமுச்வாலா 2016-17ஆம் நிதியாண்டுக்கான வேரியபில் பே அளழு 3,51,213 டாலரில் இருந்து 1,50,244 டாலராகக் குறைந்துள்ளது.
ஆனால் இவரின் பங்கு பங்களிப்பு அளவு 15.71 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இன்போசிஸ்
அபித் அலி போல இன்போசிஸ் நிறுவன தலைவரான விஷால் சிக்காவிற்கு 2016-17 நிதியாண்டிற்கு அறிவிக்கப்பட்ட சம்பளத்தில் வெறும் 46 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளார்.
கடந்த வருடம் இன்போசிஸ் நிர்வாகம் இவருக்கு 8 மில்லியன் டாலர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 3.68 மில்லியன் டாலர் மட்டுமே பெற்றுள்ளார்.
ரிஷாத் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைமை மூலோபாயம் தலைவரும், அசிம் பிரேம்ஜி அவர்களின் மகனுமான ரிஷாத் பிரேம்ஜி-யின் சம்பளமும் 20.1% வரை குறைந்து கடந்த நிதியாண்டுக்கு 2,60,015 டாலர் மட்டுமே பெற்றுள்ளார்.
டி.கே குரியன்
ஜனவரி மாதத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய டி.கே குரியன் அவர்களின் சம்பளமும் 2 மில்லியன் டாலரில் இருந்து 1.49 மில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது.


Click it and Unblock the Notifications