ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட விமான டிக்கெட் கட்டணத்தை 1,099 ரூபாய்க்கு பிரமோஷனல் ஆஃபராக அறிவித்துள்ளது.
ஏர்ஏசியாவின் இந்தப் பிக் சேல் ஆஃபரில் இணையதளம் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். மேலும் இந்த ஆஃபர் மூலமாகப் பெங்களூரு, புனே, கொச்சி, டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
சலுகை காலம்
ஏர்ஏசியாவின் இந்தப் பிக் சேல் ஆஃபரில் ஜூன் 11 வரை டிக்கெட் புக் செய்து 2018 ஜனவர் 15 முதல் 2018 ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
1,099 ரூபாய் விமான டிக்கெட் ஆஃபர்
ஏர்ஏசியா இந்தியாவின் இந்த 1,099 ரூபாய் விமான டிக்கெட் சலுகையில் கொச்சி-பெங்களூர், கோவா-பெங்களூர், குவஹாத்தி-இம்பால் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
1,499 ரூபாய் விமான டிக்கெட்
1,499 ரூபாய் விமான டிக்கெட் மூலமாக ராஞ்சி-கொல்கத்தா, கோவா-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
பிற வழித்தடங்கள்
ஹைதராபாத் முதல் கொச்சி வரை பயணம் செய்ய 1,699 ரூபாய் விமானக் கட்டணம் என்றும், டெல்லி-ஸ்ரீநகர் பயணம் செய்ய 1,799 ரூபாய் விமான டிக்கெட் கட்டணம் சென்றும் ஜெய்ப்பூர்-புனே செல்ல 2ம்699 ரூபாய் விமானக் கட்டணம் என்றும், கவுகாத்தி-பெங்களூரு செல்ல 2,799 ரூபாய் விமான டிக்கெட் கட்டணம் என்று ஏர் ஏசியா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1,098 ரூபாய் சலுகை
2018 ஜனவரி மாதத்தின் இடையில் கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,098 ரூபாய் விமானக் கட்டணம் என்று, அதில் விமானக் கட்டணம், சேவை வரி, கூடுதல் கட்டணம், கிரிஷி கல்யாண் செஸ் மற்றும் ஸ்வச் பாரத் செஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
சீட்டுகள்
ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் இந்தச் சலுகை விலையில் எத்தனை டிக்கெட்கள் என்று அறிவிக்கவில்லை. ஆனால் குறைந்த டிக்கெட்கள் மட்டும் தான் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும் என்றும், எல்லா விமானங்களிலும் இந்தச் சலுகை கிடைக்காது என்றும், இருக்கை உள்ளதைப் பொருத்து டிக்கெட் கட்டணம் மாறும் என்று அறிவித்துள்ளது.
உதான் திட்டம்
பிரமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உதான் திட்டத்தின் கீழ் 1 மணி நேரம் அல்லது 500 கிமி தொலைவிலான விமானப் பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணமாக 2,500 ரூபாய் என்ற முடிவு செய்யப்பட்டு அதற்கு 5 விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களும் இணைந்துள்ளன.
விமான டிராப்பிக்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவிக்கும் பல சலுகை காரணங்களால் 15.5 சதவீதம் வரை விமான டிராப்பிக் அதிகரித்துள்ளது என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications