நாட்டின் முன்னணி மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டின் லாபத்தில் சுமார் 43 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
இந்தத் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. நம்ம மோடிதான்..!!
ஸ்பைஸ்ஜெட்
2015-16ஆம் நிதியாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 73 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற நிலையில், 2016-17ஆம் நிதியாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாபம் அதிகளவில் சரிந்தது.
இதன் மூலம் மார்ச் 31,2017 உடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெறும் 41.6 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.
என்ன காரணம்
இக்காலகட்டத்தில் விமான எரிபொருளின் விலை அதிகரித்தது மட்டும் அல்லாமல் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகயில் விமானப் பயணிகள் எண்ணிக்கையும், விமான நிறுவனங்களும் அதிகளவில் வர்த்தகம் இல்லாமல் பாதித்தது.
இதன் காரணமாகவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் லாபம் 43 சதவீதம் வரை சரிந்துள்ளது.
9மாதங்கள்
லாப அளவீடுகளில் சரிந்தாலும், இந்நிறுவனம் கடந்த 9 காலாண்டுகளாகத் தொடர்ந்து லாபத்தைச் சந்தித்து அசத்தி வருகிறது.
மேலும் வருடாந்திர அடிப்படையில் இந்நிறுவனத்தின் லாபம் கடந்த வருடத்தின் 407 கோடி ரூபாய் அளவில் இருந்து 430 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
மொத்த வருவாய்
2016-17ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் 1,625.7 கோடி ரூபாயும், முழுநிதியாண்டிற்கு 6,191.3 கோடி ரூபாய் அளவிலான வருவாயும் பெற்றுள்ளது ஸ்பைஸ்ஜெட்.
எரிபொருள் செலவு
இந்நிறுவனத்தின் எரிபொருள் செலவு அதிகரிப்பால் நிறுவனத்தின் செலவுகள் 46 சதவீதம் அதிகரித்துச் சுமார் 160 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை இழந்தது.
விமானம்
மேலும் இந்நிறுவனத்தின் சேவையை விரிவாக்கம் செய்ய 1,50,000 கோடி ரூபாயில் சுமார் 205 போயிங் விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications