ஏர்டெல் - டெலிநார் இணைய சிசிஐ அமைப்பு ஒப்புதல்.. போட்டியை சமாளிக்குமா ஜியோ..?

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ தனது சகாக்களைப் போலவே தானும் ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்கச் சேவையின் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்தது மட்டுமல்லாமல் டெலிநார் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்தது.

கம்பிடீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா

கம்பிடீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா


இந்த இணைப்பிற்குச் செபி மற்றும் பங்குச்சந்தை ஒப்புதல் அளித்த நிலையில், ஏர்டெல் மற்றும் டெலிநார் நிறுவனங்கள் இதன் இணைப்பிற்கு ஒப்புதல் பெற தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்திடம் கடந்த வாரம்கூட்டு விண்ணப்பாகச் சமர்ப்பித்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை கம்பிடீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (CCI) இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் பங்குச்சந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

 

7 வட்டங்கள்

7 வட்டங்கள்

நார்வே நாட்டு நிறுவனமான டெலிநார் இந்தியாவில் சுமார் 7 வட்டங்களில் சேவையை அளிக்கிறது. இதில் ஆந்திர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத், யுபி(கிழக்கு), யுபி(மேற்கு) மற்றும் அஸ்சாம் பகுதிகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

ஜியோ அறிமுகத்திற்குப் பின் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் சிறிய நிறுவனங்களை வாங்கி, சந்தையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளத் திட்டமிட்டு வந்தது.

இந்நிலையில் கடைசி நேரம் வரை அமைதியாக இருந்த ஏர்டெல், டெலிநார் நிறுவனத்துடன் ரகசிமாகப் பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனத்தைப் பிப்ரவரி 2017இல் இரு தரப்பு முடிவு செய்தது.

 

வர்த்தக வாய்ப்புகள்

வர்த்தக வாய்ப்புகள்

டெலிநார் தற்போது வர்த்தகம் செய்யும் வட்டங்கள் அனைத்தும் அதிக மக்கள் தொகை கொண்டவை ஆகவே வர்த்தக வளர்ச்சி அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஏர்டெல் தெரிவித்தது.

4ஜி சேவை

4ஜி சேவை

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவையை இந்த 7 வட்டங்களிலும் விரிவாக்கம் செய்ய டெலிநார் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என ஏர்டெல் நம்புகிறது

டெலிகாம் துறை

டெலிகாம் துறை

ஜியோ அறிமுகம் குறித்த செய்திகள் வெளியான உடனே அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்தது.

ஜியோ அறிமுகத்திற்குப் பின் ஐடியா செல்லுலார் வோடபோன் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தது. இதன் பின் பார்தி ஏர்டெல் டெலிநார் நிறுவனத்தைக் கைப்பற்ற போவதாக அறிவித்த சில நாட்களிலேயே, டிக்கோனா நிறுவனத்தின் 4ஜி சேவையை முழுமையாகக் கைப்பற்றியது ஏர்டெல்.

 

ஜியோ

ஜியோ

இந்த அனைத்து இணைப்புகளும் ஜியோ அறிமுகத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்கவும், தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களுடன் தொர்ந்து வர்த்தகச் சந்தையில் நிலைத்திருக்கவும் செய்யப்பட்ட இணைப்புகள்.

இதில் அதிகம் லாபம் அடையப்போவது ஐடியா நிறுவனம். காரணம் 2வது 3வது இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் ஒன்றாகச் சேரும் நிலையில், இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்கப் போகிறது இந்தப் புதிய கூட்டணி.

 

போட்டியைச் சமாளிக்குமா ஜியோ..?

போட்டியைச் சமாளிக்குமா ஜியோ..?

இந்நிலையில் ஜியோவின் சேவைத் தரம் மேம்படாமல் இருக்கும் நிலையில் டெலிகாம் சந்தையில் தொடர்ந்து போட்டி வலிமையாகும் வரும் இந்தச் சூழலில் ஜியோ இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+