ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 7-ம் தேதி பணவியல் கொள்கையை அறிவிக்க இருக்கின்றது. கடந்த மூன்று கூட்டங்களில் ரெப்போ விகிதம் குறைக்கப்படாததால் இந்த முறை குறைக்கப்படுமா என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

இதனிடையே இன்று ஜூன் 6-ம் தேதி 2016-2017 நிதி ஆண்டுக்கான இரண்டாவது மாதாந்திரக் கொள்கை கூட்டம் துவங்கியுள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் அடுத்தக் கொள்கை கூட்டத்தின் அறிவிப்பில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் பற்றி இங்குச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ரெப்போ விகிதம்

தற்போது ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உள்ளது. ஆர்பிஐ சென்ற 3 கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைக்கவில்லை.

இந்த முறையும் நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களால் ரெப்போ விகிதம் குறைக்கப்படாது என்று கூறப்படுகின்றது.

 

வரா கடன்

அன்மையில் மத்திய அரசு ஆர்பிஐ வங்கிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் வங்கிகளில் உள்ள வரா கடனை வசூலிக்கக் கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்த நடவடிக்கைகள் பற்றியும் ஆர்பிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

 

பணப்புழக்கத்தை நிர்வகிக்க நடவடிக்கைகள்

வங்கிகள் பணப்புழக்கத்தை நிர்வகிக்கப் புதிய வழிகாட்டுதல்கள் கொள்கை கூட்டத்தில்ன் முடிவில் எடுக்கப்படும் என்றும் பழைய ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கப்பட்டதை அடுத்து இருக்கும் பணப்புழக்க சிக்கல் குறித்தும் அறிவிப்புகள் வெளிவரும்.

கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள்

வங்கிகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான கடன் வழங்குவதற்குப் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தும்.

பொருளாதார வளர்ச்சி

நல்ல பருவமழை எதிர்பார்ப்புப் பொருளாதாரம் உயர்த்தி வைக்க முடியும், ஆனால் ரிசர்வ் வங்கியோ எந்தச் சிக்கல்களும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை அதிகர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI’s next policy meet: 5 key things to watch out

RBI’s next policy meet: 5 key things to watch out
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns