எச்1பி விசா எண்ணிக்கை 37% சரிவு.. இந்திய நிறுவனங்களை சோகத்தில் ஆழ்த்திய அமெரிக்கா..!

அமெரிக்காவில் இயங்கி வரும் 7 முன்னணி இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட எச்1பி விசா எண்ணிக்கை 2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் சுமார் 37 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா அளித்த விசா எண்ணிக்கை எப்போது இல்லாத அளவிற்கு 2016ஆம் ஆண்டில் 5,436ஆகக் குறைந்துள்ளது என வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்த நேஷனல் பவுண்டேஷன் பார் அமெரிக்கன் பாலிசி அமைப்பு தெரிவித்துள்ளது.

7 இந்திய நிறுவனங்கள்

7 இந்திய நிறுவனங்கள்

மேலும் இந்த முன்னணி 7 நிறுவனங்கள் புதிய எச்1பி விசாவிற்காகச் சுமார் 9,356 விண்ணப்பங்களைப் பதிவு செய்தது. இது மொத்த அமெரிக்க ஊழியர்களில் வெறும் 0.006 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தாலும் விசா அளித்ததில் 37 சதவீதம் சரிந்துள்ளது.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருக்கும் வர்த்தகத்தைத் தொடர்ந்து சிறப்பாக நடத்த இந்தியர்கள் இப்பணிகளில் அமர்த்தத் தனது ஊழியர்களுக்குப் புதிய எச்1பி விசா கோரியது.

இதில் அமெரிக்க அரசு கடந்த வருடத்தை விட 56 சதவீத அதிக விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. இதன் படி 2015 வருடம் டிசிஎஸ்இன் 2,040 விண்ணப்பங்களை மட்டுமே நிராகரித்த நிலையில், தற்போது 4,674 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.

 

விப்ரோ

விப்ரோ

அதேபோல் புதிய எச்1பி விசாவிற்காக விப்ரோ நிறுவனம் விண்ணப்பங்களில் நிராகரிப்பு எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் சுமார் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதன் படி 2015ஆம் ஆண்டு வெறும் 1,474 விண்ணப்பங்களை மட்டுமே நிராகரித்த நிலையில், தற்போது 3,079 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் 16 சதவீதம் அதிகமாக நிராகரித்துள்ளது.

தொடரும்..

தொடரும்..

மேலும் இந்தச் சரிவு 2018ஆம் நிதியாண்டுக்காக ஏப்ரல் 2017இல் புதிய எச்1பி விசாவிற்காக விண்ணப்பங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது சந்தையில் கிளவுட் கம்பியூடிங், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வரும் காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே தேவைப்படுகின்றனர்.

மேலும் அமெரிக்க அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் அங்கு அதிகமான ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால் இனி வரும் காலங்களிலும் விண்ணப்பங்கள் வருகையும் குறையும், நிராகரிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

புதிய எச்1பி விசாவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை.

காக்னிசென்ட் (3,949), இன்போசிஸ் (2,376), டிசிஎஸ் (2,040), அக்சென்சூர் (1,889), ஐபிஎம் (1,608), விப்ரோ (1,474), அமேசான் (1,416), டெக் மஹிந்த்ரா (1,228), கேப்ஜெமினி (1,164), மைக்ரோசாப்ட் (1,145), ஹெச்சிஎல் அமெரிக்கா (1,041), இன்டெல் (1,030), டெலாயிட் (985), கூகுள் (924), லார்சன் & டூப்ரோ (870), PWC(713), எர்ன்ஸ்ட் & யங் (649), ஆப்பிள் (631), சின்டெல் (583), பேஸ்புக் (643), ஆரக்கிள் (427), சிஸ்கோ (380), மைண்டுட்ரி (327), கோல்ட்மேன் சாக்ஸ் (287), யுஎஸ்டி குளோபல் (283), ஜே.பி. மோர்கன் ச்சேஸ் (271), ஐகேட் (255), ஸ்டான்போர்ட் (221), யாஹூ! (206) மற்றும் கே.பி.எம்ஜி(198)

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+