இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் மத்திய வங்கியுடன் இணைந்து கொண்டு வரப்பட்ட யூபிஐ செயலி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளன.
இதனை அறிந்த இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் யூபிஐ செயலிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்திற்குத் தகவல் அளித்த மூத்த வங்கி அதிகாரி இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் யூபிஐ செயலிகள் மூலமாகச் செய்யப்படும் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று வங்கிகளைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
யூபிஐ செயலி
யூபிஐ செயலி மூலமாக மின்னஞ்சல் போன்ற முகவரியை உள்ளிட்டு எளிதாகப் பணத்தைப் பரிமாற்றிக்கொள்ளலாம். இந்தச் செயலியை இந்திய முழுவதும் இப்போது 30க்கும் மேற்பட்ட வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் விரைவில் 50 வங்கி நிறுவனங்கள் யூபிஐ சேவையை அளிக்க இருக்கின்றன.
எச்டிஎப்சி வங்கி
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கி ஜூலை 10-ம் தேதி முதல் யூபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு
எச்டிஎப்சி வங்கி யூபிஐ செயலி மூலமாகச் செய்யப்படும் 25,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 3 ரூபாய் உடன் சேவை வரியைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
25,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிற வங்கிகள்
யூபிஐ செயலி பணப் பரிவர்த்தனை சேவையை வழங்கி வரும் பிற வங்கி நிறுவனங்களும் கட்டணம் வசூலிப்பது குறித்து விவாதித்து வருகின்றன.
டிஜிட்டல் பரிவர்த்தனை
வங்கிகள் இது போன்ற முடிவை எடுத்தால் அரசு கொண்டுதுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை பெரிதளவில் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் நிறுவனத்தைப் பொருத்த வரை ரொக்க பணத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே பிரதான பணியாக உள்ளது.
பிம்
யூபிஐ செயலிகள் மத்திய அரசு வெளியிட்டுள்ள பிஎச்ஐஎம் எனப்படும் பிம் செயலியிலும் தனது சேவையை அளிக்கின்றது.
பரிவர்த்தனைகளின் அளவு
சென்ற ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6.9 மில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் அதன் மதிப்பு 2,200 கோடி ரூபாய் என்றும் இதுவே சென்ற 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 90 கோடியாக இருந்தது என்றும் 0.3 மில்லியன் பரிவத்தனைகள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications