2018ஆம் நிதியாண்டின் 2வது இருமாத நாணய கொள்கை கூட்டம் நேற்று துவங்கிய நிலையில், இன்று முடிவடைகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் வட்டியை குறைப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நாணய கொள்கை கூட்டம் எப்படி இருக்கும் என்பதை கணிப்பதற்கு முன்பு, தற்போத நிலை என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
வட்டியை குறைப்பது தேவையற்றது
பணமதிப்பிழப்பால் ஏற்கனவே நாட்டின் வளர்ச்சி அதிகளவில் பாதித்துள்ளது நிலையில் வட்டியை குறைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு, அதுமட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பண புழக்கம் வங்கித்துறையில் தலைக்கு மேல் உள்ள நிலையில் வட்டியை குறைப்பது தேவையற்றது.
இருப்பு தொகை
கடந்த வருடம் மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை தடை செய்தது. இதனால் வங்கித்துறையில் சுமார் 60 பில்லியன் டாலர் பணம் பழக்கத்தில் உள்ளது.
கடன் தேவை
மத்திய அரசு பல முதலீட்டு பத்திரங்களை அறிவித்தும் வங்கியில் இருக்கும் பணம் முழுமையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் நாட்டில் பணவீக்கத்தின் அளவு வரலாறு காணாத அளவிற்கு சரிந்தது, அதுமட்டும் அல்லாமல் மக்களின் கடன் தேவை 1992ஆம் ஆண்டை போல் மிகவும் குறைவாக இருந்தது.
பணவீக்கம்
ஜனவரி மார்ச் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்த நிலையிலும், நுகர்வோர் விலை நிலைகள் ஏப்ரல் மாதத்தில் 2.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் நிலையில் வட்டியை குறைத்தால் எவ்விதமான பயனும் இருக்காது.
கணிப்பு
சந்தை கணிப்புகளின் படி வங்கித்துறையில் 4 டிரில்லியன் ரூபாய், (62 பில்லியன் டாலர்) பணம் கையில் உள்ளது. இது தேவையான அளவை விடவும் மிகவும் அதிகமானது என்பது குறிப்பித்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காது, உயர்த்தவும் செய்யாது என தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிக்கிறது.


Click it and Unblock the Notifications