தென்கொரியா நாட்டின் முன்னணி மொபைல் நிறுவனமான சாம்சாங், இந்தியாவில் தனது மொபைல் தயாரிப்பு அளவை இரட்டிப்பாக அடுத்த 3 வருடத்தில் 5,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் இந்நாட்டு நிறுவனத்திற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் தற்போது சாம்சங் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
இந்நிறுவனத்தின் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நிலையில், இதன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவன வரிவாக்கம், அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்துதல் எனப் பல முக்கியத் திட்டங்களுடன் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தென் ஆசிய
உலகளவில் மொபைல் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாகத் திகழும் சாம்சங் இந்தியாவில் செய்ய உள்ள முதலீட்டின் வாயிலாக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா சந்தையின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், இந்தியாவில் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
தென் கொரியா
சாம்சங் இந்தியாவில் செய்யப்பட்ட அதிகளவிலான முதலீடு இது, அதுமட்டும் அல்லாமல் ஒரு தென் கொரியா நிறுவனம் இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதும் இதவே.
இந்திய சந்தை
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களும் உத்திர பிரதேசத்தில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது தான். இந்நிலையில் இப்புதிய முதலீட்டின் வாயிலாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் வெளிநாடுகளிலும் விற்பனையாக உள்ளது.
பிரிட்ஜ்
மேலும் சாம்சங் இந்தியா இந்தப் புதிய முதலீட்டு வாயிலாக இந்நிறுவனத்தின் பிரிட்ஜ் தயாரிப்பு எண்ணிக்கையும் இரட்டிப்பாக முடிவு செய்துள்ளது.
சென்னை
மேலும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையிலும் இருக்கிறது. ஆனால் முதலீட்டில் அதிகமான அளவு உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா தொழிற்சாலையிலேயே அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஜிஎஸ்டி
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களுக்கு ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படும் ஜிஎஸ்டி வரி அதிகச் சலுகை உண்டு. இதனால் ஆப்பிள், சாம்சங் வரை பல பன்னாட்டு மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் துவங்கவும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications