இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த திலீப் சங்வி வெறும் ரெண்டே வருடத்தில் 6வது இடத்திற்கு இறங்கியது மட்டும் அல்லாமல், இந்த 2 வருடத்தில் சுமார் 90,000 கோடி ரூபாய் வரையிலான சொத்தை இழந்துள்ளார்.
திலீப் சங்வி இந்திய மருத்துத் தயாரிப்பு மற்றும் விற்பனை உலகை ஆட்சி செய்யும் சன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். ஏன் இந்த நிலை..?!
அமெரிக்கா
அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அந்நாட்டில் இருக்கும் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் ஆசிய நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
விலை குறைப்பு
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல நிறுவனங்களின் மருத்துகள் அமெரிக்காவில் விற்பனை செய்யத் தற்காலிக தடைவிதிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பின் முறையான ஆய்வுகளுக்குப் பின் சில மருந்துகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டாலும்.
இவை அனைத்தும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதன் விலையைக் குறைத்தால் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என FDA அமைப்பு உத்தரவிட்டது.
வர்த்தகம்
இதன் காரணமாக வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக அனைத்து நிறுவனங்களும் விலை குறைந்தது விற்பனை செய்யது. இதில் சன் பார்மா நிறுவனமும் அடங்கும்.
காலாண்டு முடிவுகள்
இந்தப் பாதிப்பின் எதிரொலியாகச் சன் பார்மா நிறுவனத்தின் காலாண்டு முடிவில் அதிகவிலான வருவாய்ச் சந்தித்தது மட்டும் அல்லாமல் கடந்த 2 வருடத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 56 சதவீதம் சரிந்துள்ளது.
சொத்து இழப்பு
பங்கு மதிப்பின் சரிவால் கடந்த இரண்டு வருடத்தில் சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் சங்வி சுமார் 14.1 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை இழந்துள்ளார்.
இதனால் இந்திய பணக்கார்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
ரூபாய் மதிப்பு
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.25 ரூபாய், சில மாதங்களுக்கு முன்பு இதன் மதிப்பு 68.00 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அவர் இழந்த சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கும் சந்தை வல்லுனர்கள கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications