ரிசர்வ் வங்கி புதன்கிழமை நடந்திய நாணய கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்குப் புதிய தளர்வுகளை அறிவித்ததுள்ளது. இதன் மூலம் வங்கிகள் இனி மக்களுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் குறைவான வட்டியில், அதிகக் கடன் அளிக்கு முடியும்.
எப்படி..? என்ன தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது..? சமானியர்களுக்கு லாபம் உண்டா..?
செக்கியூரிட்டி
இதற்கு முன் வங்கி அளிக்கும் வீட்டுக் கடனுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 400 ரூபாய் அதாவது 0.4% தொகையைச் செக்கியூரிட்டியாக வைக்க வேண்டும். தற்போது மத்திய வங்கியான ஆர்பிஐ அறிவித்துள்ள தளர்வுகள் படி இனி வங்கிகள் 0.25% அதாவது லட்சம் ரூபாய்க்கு 250 ரூபாய் வைத்தால் மட்டும் போதுமானது.
எஸ்எல்ஆர் விகிதம்
இதனுடன் வங்கிகளிடம் வைப்பு செய்யப்பட்டும் தொகையில் குறிப்பிடத்தக்க சதவீதம் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் அளவை தான் SLR விகிதம் எனக் கூறப்படும். இந்த எஸ்எல்ஆர் விகிதத்தை ஆர்பிஐ நேற்று நடந்த கூட்டத்தில் 0.5 சதவீதம் வரை குறைத்துள்ள.
கூடுதல் பணம்
இதன் மூலம் வங்கிகளிடம் கூடுதலாகப் பணம் கையில் இருக்கும். இதனால் வங்கிகள் அதிகமானோருக்குக் குறைந்த வட்டியில், அதிகளவிலான தொகையைக் கடன் அளிக்க முடியும்.
மாற்றம்
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள படி இனி வங்கிகள் 30 -75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கு, பாதுகாப்பிற்காக வைக்கப்படும் தொகை 50 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல் 75 லட்சம் ரூபாய் கடனுக்கு வைக்கப்பட்டும் தொகை அளவு 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்களுக்கு அளிக்கப்படும் 30 லட்சம் ரூபாய்க்கும் குறைவான கடனுக்கு எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை.
எஸ்பிஐ
தற்போது எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வீட்டுக் கடனுக்கு 8.35 சதவீதம் வட்டியும். 75 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் வீட்டுக் கடனுக்கு 8.65 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது.
அதிக வருமானம் உடைய 75 லட்ச கடனுக்கு இனி குறைவான வட்டியிலேயே வங்கிகள் கடன் அளிக்க முடியும்.
பணப்புழக்கம்
ஏற்கனவே வங்கிகள் மத்தியில் அதிகளவிலான பணம் இருப்பு இருக்கும் நிலையில் எஸ்எல்ஆர் விகிதம் குறைத்ததன் மூலம் ஜனவரி 2019ஆம் ஆண்டு வரையிலான பணப்புழக்க இலக்கை அடைய முடியும் என ஆர்பிஐ துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை
கோயம்புத்தூர் பேராசிரியர்
சமோசா


Click it and Unblock the Notifications