இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இந்த ஆண்டுடன் 10 வருடத்தை நிறைவு செய்கின்றது. பெங்களூரில் முதன் முதலாகத் தனது சேவைத் துவங்கிய பிளிகார்ட் பெங்களூரில் தற்போது உள்ள மிகப் பெரிய தலைவலியான டிராப்பிக் பிரச்சனைக்கு உதவி செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகப் பிளிகார்ட் நிறுவனம் பொது மக்களுக்கு நேரடியாக ஒரு சவாலை வெளியிட்டுள்ளது. தங்களது தலம் மூலமாகப் பெங்களூரு டிராப்பிக்கிற்குத் தீர்வு கான ஐடியா இருந்தால் தரலாம் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
சில்க் போர்டு, கிருஷ்ணராஜபுரம்
பிளிகார்ட் நிறுவனத்தின் முதன்மை ஆர்க்கிடெக்ட் உத்கரஷ் இது பற்றிக் கூறும் போது இது ஒரு சிறிய முயற்சி என்றும், பொதுமக்கள் தங்களது எண்ணங்களை எங்களுடன் பகிரலாம். அந்த எண்ணங்கள் சிக்கலைத் தீர்க்க வழிகுத்தால் நன்றாக இருக்கும். முக்கியமாகச் சில்க் போர்டு, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஜங்ஷன்களில் உள்ள சிக்கல்களுக்கான தீர்வுகளாக இது இருக்க வேண்டும். இது ஒரு சிறிய பணி என்றால் பிளிகார்ட் முதலீடு செய்யும்.
பெங்களூரு டிராப்பிக்
பெங்களூருவில் நாளுக்கு நாள் மிக மோசமாக டிராப்பிக் அதிகரித்து வருகின்றது. இதனை முறையாகத் திட்டமிட்டு தீர்க்க வேண்டும். சிறந்த தொழில்நுட்பம் அல்லது தீர்க்க சிறந்த வழி ஒன்று வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பொது மக்கள் தங்களது திட்டங்களைப் பதிவு செய்து பகிரலாம்.
பிளிப்கார்ட் டிராப்பிக் சிக்கலுக்கு ஏன் தீர்வு காண வேண்டும்?
பொருட்களை டெலிவரி செய்வதில் உள்ள சிக்கலினால் தான் பிளிப்கார்ட் இந்த முடிவை எடுத்துள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் சரியில்லை என்றால் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். அதனால் நாம் நகரத்திற்கு எதாவது செய்தே ஆக வேண்டும் என்று உத்கரஷ் கூறினார்.
பிளிப்கார்ட் நிறுவன கிளைகள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான நிறுவன கிளைகள் டிராப்பிக் அதிக உள்ள இடங்களில் தான் உள்ளது.
டாப் 10 குழுக்கள்
தங்களது திட்டங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் பங்கேற்பாளர்கள் பதிவு செய்த பிறகு இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்படும். பின்னர்ச் சிறந்த ஐடியா தேர்வு செய்யப்படும். டாப் 10 குழுக்கள் ஜூரி முன்பு தங்களது திட்டத்தை விளக்க வேண்டும்.
நடைமுறைக்கு ஏற்றத் தீர்வாக இருத்தல் வேண்டும்
இந்தத் திட்ட அறிக்கையை வெறும் தத்துவார்த்த தீர்வாக மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
பரிசு
சிறந்த தீர்வு அளிக்கும் நபருக்கு, குழுவிற்கு 2 லட்சம், 1 லட்சம் மற்றும் 50,000 ரூபாய் என மூன்று பரிசுகள் அளிக்கப்படும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications