பார்சூன் 500 பட்டியல்: முதல் இடத்தை தட்டிச்சென்ற வால்மார்ட்..!
கடந்த 63 வருடமாக அமெரிக்கச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களை ஆய்வு செய்து பார்சூன் 500 பட்டியலில் வெளியிடப்பட்டு வருகிறது.
இப்பட்டியலில் இடம்பெறும் 500 நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் 3இல் 2 பங்கு மதிப்புடையது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆனால் உண்மை இதுதான்.
2017ஆம் ஆண்டு பார்சூன் 500 பட்டியல் நிறுவனத்தின் வருவாய் அளவுகளை வைத்துப் பட்டியலிப்படுகிறது.
இந்த 500 நிறுவனங்களின் மொத்த வருவாய் 12 டிரில்லியன் டாலர், மொத்த லாபம் 890 பில்லியன் டாலர், இதன் சந்தை மதிப்பு 19 டிரில்லியன் டாலர், இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 28.2 மில்லியன்.


Click it and Unblock the Notifications