ஐடியா நிறுவனத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா சென்ற ஆண்டு வாங்கிய சம்பளத்தை விடப் பல மடங்கு குறைவாக 2017 நிதி ஆண்டில் சம்பளம் வாங்கியுள்ளார்.
என்ன பல மடங்கு குறைவான சம்பளம் என்றாலும் கோடிகளில் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இவர் வாங்கிய சம்பளம் வெறும் 3.30 லட்சம் ரூபாய் மட்டுமே ஆகும். இந்தச் சம்பளம் ஐடியா நிறுவனத்தில் இருந்த மட்டும் இவர் பெற்ற சம்பளம் ஆகும்.
குமார் மங்களம் பிர்லாவுக்கு ஐடியா அளித்த சம்பளம்
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் காலாண்டு அறிக்கை வெளியிட்ட போது இவரது சம்பளம் 13.15 கோடியாக இருந்தது. இதுவே 2017-ம் ஆண்டு 3.30 லட்சம் ரூபாயாகச் சரிந்துள்ளது.
ஐபிஓ
இந்த ஆண்டு ஐடியா நிர்வாகம் தங்களது நிறுவனத்தின் தலைவர் அல்லது பிற இயக்குநர்களுக்கு எந்தக் கமிஷன் தொகையையும் அளிக்கவில்லை, அது மட்டும் இல்லாமல் ஐபிஓ-ல் பங்குகளை வெளியிட்ட முதன் முறையாக ஐடியா நிறுவனம் இந்த அளவிற்கு வருவாயினை இழந்துள்ளது.
கடினமான ஆண்டு
சென்ற ஆண்டுப் பார்தி ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் கடுமையான ஆண்டு என்று கூறலாம். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது சேவையைச் செப்டம்பர் மாதம் முதல் துவங்கியதில் இருந்து நடந்த விலைப் போரில் போட்டி நிறுவனங்கள் பெரும் அளவில் பாதிப்பை சந்த்திள்ளன.
2016-2017 நிதி ஆண்டில் ஜியோ நிறுவனம் 404 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகவும், அதில் 0.8 சதவீதம் வருவாய் இழந்து 35,883 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இணைவு
வோடாபோன் இந்தியா நிறுவனத்துடனான இணைவிற்கான பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கான அனுமதில் இன்னும் பல நிலைகளில் கிடைக்காததினால் இணைவும் இன்னும் முழுமை அடையவில்லை.
பிற இயக்குனர்களின் சம்பளம்
நியமனம் இல்லாத இயக்குனர்கள் மத்தியில், சஞ்சீவ் அகா பெற்று வந்த 16.7 லட்சம் ரூபாய் சம்பளம் 5.7 லட்சம் ரூபாயாகச் சரிந்துள்ளது. இருப்பினும் தலைமை குழுவில் உள்ளவர்களின் சன்பளம் பெறும் அளவில் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications