இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல் முதல் ராணுவ ஹெலிக்காப்டர் வரையில் அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டணி அமைக்க மத்திய அரசு தனது கூட்டணி ஒப்பந்தத்தின் வரைவு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதனால் அடுத்தச் சில நாட்களில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் பணியைத் துவங்க உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசின் ஆயுத ஒப்பந்த திட்டத்தின் முதல் திட்டமாக இதுதான் இருக்கப் போகிறது. இதற்காக இந்திய நிறுவனத்தைத் தேர்தெடுக்க மத்திய அரசு நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்க உள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் எல் அண்டி டி மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் ஆகிய நிறுவனங்கள் பி-75 திட்டத்தில் போட்டிபோட்டு வருவதாகத் தெரிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்குத் தேவையான 6 ஸ்கோர்பைன் கப்பலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications