மும்பை: நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நிர்வாகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புதிய மாற்றத்தின் மூலம் அனைத்து ஊழியர்களும் ஒரே நிலை எவ்விதமான பதவி வேறுபாடும் இன்றி இயல்பான நிலையில் பணியாற்ற வகையில் செய்துள்ளது.
அப்படி என்ன மாற்றம்..?
பதவிகள் நீக்கம்...
டாடா மோட்டார்ஸ் நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்தை விளக்கிய தலைமை மனிதவள பிரிவு அதிகாரி கூறுகையில், இனி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் துணை தலைவர், ஜெனரல் மேனேஜர், பிராந்திர விற்பனை தலைவர், ஏரியா மேனேஜர் பதவிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிர்வாகக் குழுவில் நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவின் பிற 10 ஊழியர்களின் பதவி மட்டுமே அப்படியே இருக்கும் மீதமுள்ள அனைவரின் பதவிகளும் நீக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
இந்தப் பதவி நீக்கத்தில் யாரும் வேலையை விட்டுநீக்கப்படுவதில்லை. பதவி மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என் டாடா மோட்டார்ஸ் தனது புதிய நிர்வாக மாற்றத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
பிஸ்னஸ் கார்டு
இதன் மூலம் உயர்மட்ட அதிகாரிகளின் பிஸ்னஸ் கார்டுகளில் அவர்கள் வேலை செய்யும் பிரிவு க்குப் பின் ஹெட் அதாவது தலைமை மட்டுமே இருக்கும் வேறு எதுவும் இருக்காது.
இது ஜாம்ஷத்ப்பூர் தொழிற்சாலை முதல் புனேவில் உள்ள பெயின்ட் ஷாப் வரையில் அனைத்துத் தொழிற்சாலையிலும் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
எதற்காக இந்த மாற்றம்
இப்புதிய மாற்றத்தின் மூலம் ஊழியர்கள் பதவிக்காகப் பணியாற்றாமல் தங்களது பணியை முழுமையாகச் செய்ய முடியும். மேலும் ஊழியர்கள் மத்தியில் போட்டி குறையும். பணிகள் சரியான மற்றும் முறையாக முடிக்க முடியும் என டாடா மோட்டர்ஸ் முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக..
இந்திய கார்பரேட் நிறுவனங்களில் முதல் முறையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் முதல் முறையாக ஊழியர்களின் உயர்மட்ட பதவிகளை நீக்கியுள்ளது.
நிர்வாக மட்டம்...
கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் படிகளாக இருந்த நிர்வாக மட்டும் வெறும் மட்டங்களாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் தற்போது நிர்வாகப் பொறுப்பில் வெறும் 13,000 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இது கடந்த வருடத்தை விடவும் 12 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications