மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிகையினால் தான் இந்தியாவின் பொருளாதாரம் பெறும் அளவில் சரிந்துள்ளதாகவும் இதுவே தங்களது வணிகம் சரிந்ததற்குக் காரணம் என்றும் என்று எஸ்பிஐ வங்கி ஞயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி பத்திரங்கள் மூலமாக 15,000 கோடி நீதி திரட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பிற்கு முன் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்த கவலைகள் மற்றும் சாத்தியங்கள் பற்றி எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டு இருந்தது.
வளர்ச்சி விகிதம்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது, இது வங்கியின் வியாபரத்தை பாதிக்கின்றது என்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் "முன்னோக்கு" அறிக்கைகளை நிதி செயல்திட்டங்கள் ஒத்துப்போகவில்லை என எஸ்பிஐ அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
வங்கி கணக்கும் லாபமும்
நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு என இரண்டும் அதிகரித்து வரும் அதே வேலையில் போட்டியாளர்களும் அதிகரித்து வருகின்றனர், அதனால் லபாம் இழப்பு ஏற்பட்டு ரிஸ்க் அதிகரித்துள்ளது என்று எஸ்பிஐ கூறியுள்ளது.
மோசடிகள்
பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் அதிகளவில் மோசிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வங்கி தள்ளப்பட்டது என்றும் அதனால் வங்கியின் மதிப்பு பல இடங்களில் சரிந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
துணை வங்கிகளுடன் இணைவு
எஸ்பிஐ வங்கி ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிழா வங்கிகளுடன் ஏப்ரல் மாதம் இணைந்த பிறகு 2016-ம் ஆண்டு வரை உலகின் டாப் வங்கி பட்டியலில் 55 வது இடத்தில் இருந்து 50-க்குள் முன்னேறியுள்ளது.
பண மதிப்பு நீக்கம்
கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2016 நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பை நீக்கியது நாட்டில் கடுமையான பண நெருக்கடிக்கு வழிவகுத்தது.


Click it and Unblock the Notifications