பிட்காயின் பற்றி என்ன மக்கள் இடையில் அச்சம் இருந்து வந்தாலும் இதில் செய்யப்படும் முதலீடு குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஞாயிற்றுக்கிழமை ஒரு பிட் காயின் மதிப்பு 3,000 டாலர்கள் வரை உயர்ந்தது.
மே மாதத்தின் தொடக்கத்தில் ஒரு பிட் காயின் மீதான மதிப்பு 1,400 டாலர்களாக இருந்ததில் இருந்து மக்களிடையில் ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் கருப்புப் பணம் அதிகம் புழுங்கும் இடமாகப் பிட்காயின் மாறியுள்ளது.
ஆர்பிஐ எச்சரிக்கை
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்தப் பிட்காயின் மதிப்பு உருவாக்கம், சொத்துப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை படுத்த படாத பரிமாற்றங்களின் போது ஏற்படும் விளைவுகள் நிதி மற்றும் சட்டம் சம்பந்தப்பட்ட ஆபத்துக்களுக்கு இவற்றில் ஈடுபடுபவரின் சொந்தப் பொறுப்புகளின் அடிப்படையிலேயே செயல்பட்டுக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு உயர்வும், சரிவும்
ஞாயிற்றுக்கிழமை என்ன தான் பிட்காயின் விலை மதிப்பு 3,000 டாலர்களைத் தொட்டு இருந்தாலும் செவ்வாய்க்கிழமை அதன் மதிப்பு 2753.74 டாலர்களாகக் குறைந்துள்ளது.
இந்திய ரூபாயின் பிட்காயின் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பிட் காயின் 177466.15 ரூபாய் ஆகும்.
பிட் காயின் என்றால் என்ன?
பிட் காயின் ஒரு கரன்சிதான். ஆனால் இது ஒரு மெய் நிகர் கரன்சி. இதன் வடிவத்தை நன்கு அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இந்தக் காயினை நாம் நம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பரிமாற்றங்கள் செய்ய முடியாதது. இது காற்றில், கணினியில் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு வகைப் பணப் பரிமாற்றம். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிவர்த்தனைக்கானது. ஜப்பானியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை மெல்ல மெல்லக் காலூன்றி வருகிறது.
இந்தியாவில் பிட்காயினின் வளர்ச்சி
இந்தியாவில் தினமும் 2,500 பயனர்கள் பிட்காயின் கணக்கை துவங்குவதாகவும் இன்று வரை 5 லட்சம் நபர்கள் பிட்காயின் செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாகவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications