5 வருட சரிவில் பணவீக்கம்.. உணவு பொருட்களின் விலை அதிகளவில் குறைந்தது..!
மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் குறியீடு 2.18 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது 2012ஆம் ஆண்டின் அளவை அடைந்து 5 வருடச் சரிவை எட்டியுள்ளது.
இன்றைய சந்தை வர்த்தகச் சரிவிற்கு முக்கியக் காரணமாக விளங்கி பணவீக்கம் குறித்த தகவல்கள் மத்திய அரசு மாலையில் வெளியிட்டது. இதன் படி மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் குறியீடு 2.18 சதவீதம் வரை குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 2.99 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மே மாதத்தின் பணவீக்கம் 2012ஆம் ஆண்டின் அளவை அடைந்து 5 வருடச் சரிவை எட்டியுள்ளது.

இந்நிலையில் சில்லறை பணிநீக்கம் 1.05 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஏப்ரல் மாதம் இதன் அளவு 0.61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் அதிகளவில் சரிந்ததற்குக் காரணம், நாட்டின் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதுவே இந்தச் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications