நாட்டின் மிகப்பெரிய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்ட நிலையில் அது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காரணத்தால், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தபடி நாட்டின் அனைத்து பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிப்பு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தில், ஓஎன்ஜிசி நிறுவனம், பாரத் பெட்ரோலியம் அல்லது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற முடிவு செய்தது.

இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் மத்திய அரசிடம் சுமார் 54.93 சதவீதம் உள்ளது. இதன் மதிப்பு 55,885 கோடி ரூபாய், சந்தையில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 1,01,738 கோடி ரூபாய்.

மறுப்புறம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சந்தை மதிப்பே 54,797 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் அரசு பங்கு இருப்பான 51.11 சதவீத பங்குகளை 28,006 கோடி ரூபாய்க்கும், பொதுச் சந்தையில் இருக்கும் பங்குகளை 14,000 கோடி ரூபாய்க்கும் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற உள்ளது.


Click it and Unblock the Notifications