இன்றைய உலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை, அட இப்ப அட்வைஸ் கூடக் கவுன்சிலிங், கன்சல்டிங் எனப் பல பெயர்களில் நடத்துகின்றனர். இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தனது புதிய டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ அறிமுகம் செய்த போது அனைத்துச் சேவைகளையும் இலவசம் என அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவையே திருப்பிப் போட்டது.
இந்த இலவச சேவைக்கு ரிலையன்ஸ் ஜியோ எவ்வளவு செய்திருக்கும் என்பது தான் இப்போதைய கேள்வி.
டிராய்
மார்ச் மாதத்திற்கான காலாண்டு நிதியியல் அறிக்கையை டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் வெளியிட்டது, இதில் ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால் இணைப்பிற்கு மட்டும் செலுத்தப்பட்ட தொகையை வெளியிட்டுள்ளது.
மார்ச் காலாண்டு
ரிலையன்ஸ் ஜியோ ஜனவரி-மார்ச் 2017 காலாண்டு வரையில், சுமார் 321.50 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றது.
இக்காலகட்டத்தில் வாய்ஸ் கால் இணைப்பிற்காகப் பிற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட இன்டர்கனெக்ஷன் பாயின்ட்-க்கான செலுத்தப்பட்ட தொகை மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய்.
14 பைசா
சந்தையில் உள்ள பிற நிறுவனங்கள் இன்டர்கனெக்ஷன் பாயின்ட் அளித்ததன் மூலம் ஜியோவின் வாய்ஸ் கால் இணைக்க ஒரு நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் படி ஜியோ ஒரு வாடிக்கையாளருக்கு மாதத்திற்கு 71.40 ரூபாய் இணைப்புக் கட்டணமாகச் செலுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள்
இக்காலாண்டில் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 70 மில்லியனாக இருந்தது. மேலும் இக்காலகட்டத்தில் வெறும் 100 ரூபாய் மட்டுமே மாத கட்டணமாகப் பெற்றது ஜியோ.
இதில் 70 ரூபாய் இணைப்புக் கட்டணமாகச் செலுத்தியுள்ளது ஜியோ.
பிரைம்
321.5 கோடி ரூபாய் வருமானம் என்பது இக்காலகட்டத்தில் 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தியதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் தான் இது.
டேட்டா சேவை
மீதமுள்ள தொகையில் அதாவது 100 ரூபாயில் மீதமுள்ள 30 ரூபாயில் தான் ரிலையன்ஸ் ஜியோ தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications