ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தலைவரான அமில் அம்பானி நடப்பு ஆண்டுச் சம்பளமும் வேண்டாம், கமிஷனும் வேண்டான் என்று கூறியுள்ளார்.
டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிகக் கடன் வாங்கிப் பிரச்சனையில் தவித்து வருகின்றது, இதனால் தான் அனில் அம்பானி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
டாப் நிர்வாகிகளுக்கும் சம்பளம் குறையும்
ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்தின் டாப் நிர்வாகிகளுக்கும் இந்த ஆண்டு இறுதி வரை 21 நாட்களுக்கான சம்பளம் அளிக்கப் போவதில்லை என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அனில் அம்பானி
நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி தானாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் இந்த நிதி ஆண்டுத் தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து சம்பளம் அல்லது கமிஷனை பெற போவதில்லை என்று கூறியதாக ஆர்காம் நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
வராக் கடன்
அன்மையில் வராக் கடன் சிக்கலில் இந்த நிறுவனம் சிக்கியதினால் அந்தக் கடனை டிசம்பர் மாத இருதிக்குள் திருப்பி அளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை ஆர்காம் நிறுவன தலைவர் எடுத்துள்ளார். டிசம்பர் மாதத்திற்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் 45,000 கோடி ரூபாய் கடனை திருப்பு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல், ப்ரூக்ஃபீல்டு டீல்
ஏர்செல் நிறுவனத்தின் டீல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு நிறுவன டீல் இரண்டும் முடிவு செப்டம்பர் மாதத்துடன் முடிவு பெறும் போது கடன் அளவு 20,000 கோடியாகக் குறையும் என்று அனில் அம்பானி அறிவித்துள்ளார்.
ஏர்செல், ப்ரூக்ஃபீல்டு டீலினால் 2017 செப்டம்பார் 30-ம் தேதிக்குள் 25,000 கோடிக்கு அதிகமாக வருவாய் கிடைக்கும் என்றும் அதன் மூலம் 60 சதவீத கடன் அளவு குறையும் என்றும் ஆர்காம் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
சரிந்த புள்ளிகள்
கடந்த சில நாட்களாக ஆர்காம் நிறுவனத்தின் ரேட்டிங் சரிந்துள்ளது அது பங்குகளையும் பெரிதளவில் பாதித்துள்ளது. மும்பை பங்கு சந்தையைப் பொருத்தவரை 0.83 சதவீதம் வரை பங்குகளில் விலை சரிந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications