இந்திய ஐடி துறையில் இன்போசிஸ், காக்னிசெட், டாடா டெலிசர்வீசஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் அதிகளவில் ஈடுபட்டு வரும் நிலையில், டெக் மஹிந்திரா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
டெக் மஹிந்திதரா உலக நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் நிறுவனமாக உருமாற முடிவு செய்துள்ளது.
கூட்டணி
இதற்காகத் தனது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் 3 கட்ட பயிற்சி திட்டத்தை வடிவமைத்து, அன்லைன் கல்வி நிறுவனம், நேரடி டெக்னாலஜி பயிற்சி அளிக்கும் 3 நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இதன் படி டெக் மஹிந்திரா நிறுவனம் எட்கேஸ்ட், Pluralsight மற்றும் கோர்ஸ்ரா ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இப்பட்டியலில் பல நிறுவனங்கள் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
90,000 ஊழியர்கள்
இந்நிலையில் தனது நிறுவனத்தில் சுமார் 90,000 ஊழியர்களுக்கு டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் துறையில் புதிய டெக்னாலஜியில் பயிற்சி அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான அதுல் குன்வார் தெரிவித்துள்ளார்.
30 அதிகாரிகள்
ஊழியர்களைப் புதிய டெக்னாலஜிகளில் பயிற்சி அளிக்கவும், அதற்கான கல்வியைத் தேர்ந்தெடுக்கவும், சந்தை வளர்ச்சியைக் கணக்கிட்டு, கணித்துத் திறன் தேவையைப் பூர்த்திச் செய்யாவதற்காகவே தனிப்பட்ட முறையில் 30 அதிகாரிகளை நியமித்துள்ளது டெக் மஹிந்திரா.
ஆட்டோமேஷன்
நிறுவனத்தின் தொடர்ந்து செய்யப்படும் பணிகளை ஆட்டோமேஷன் செய்வதைத் தடுக்க முடியாது, அதேபோல் ஊழியர்களின் திறன் மேம்பாடும் மிகவும் அவசியமான ஒன்று.
இன்றைய நிலையில் ஈஆர்பி, டேட்டா அனலிட்டிக்ஸ், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகிய துறைகளில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்துப் புதிய வர்த்தகத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளோம் என அதுல் குன்வார் கூறினார்.
முதலீடு
ஊழியர்களின் பயிற்சிக்காகவே டெக் மஹிந்திரா நிர்வாகம் தற்போது அதிகளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் முதலீடு குறித்து எவ்விதான தகவல்களையும் குன்வார் அளிக்கவில்லை.
விரிவாக்கம்
மேலும் ஐயர்லாந்து-இல் டெக் மஹிந்திரா தனகு பிபிஓ மற்றும் டெலிகாம் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய் முடிவு செய்துள்ளது. இதற்காக 50 பேர் கொண்ட புதிய அணியை டெலிகாம் துறைக்காகப் பணியில் அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு இது ஜாக்பாட்..
டெக் மஹிந்திரா நிறுவன ஊழியர்களுக்கு இது உண்மையிலேயே ஜாக்பாட் தான். காரணம் சந்தையில் இருக்கும் பிற அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில், ஊழியர்களின் திறனை வளர்க்கப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications