மத்திய அரசு ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் செய்யும் நிதி பரிமாற்றங்கள் செய்ய வங்கி கணக்கை திறக்க, மற்றும் எந்த நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லை என்றால் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.
2017 பட்ஜெட்
2017 பட்ஜெட்டினில் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக வேண்டும் என்பதைக் கட்டாயம் என்றும் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம் என்பதை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
50,000 ரூபாய்
பண மோசடி (ரெகார்ட்ஸ் பராமரிப்பு) விதிகளைத் தடுக்கும் விதத்தில், 2005 ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட எல்லா நிதி பரிமாற்றங்களுக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணை இணைக்க வேண்டும்.
சிறு வங்கி கணக்குகள்
சிறு வங்கி கணக்குகள் மீதான சட்டத்தை மேலும் இறுக்கும் விதமாகவும் வாடிக்கையாளர்கள் அடையாள ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வைத்துள்ள வங்கி கணக்குகளைக் கண்காணிக்கவும் அந்தச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தேவையில்லாத உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இதனைப் பார்க்கும் போது உச்ச நீதிமன்றத்தின் பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு அதிராக வழக்கு தொடர்ந்து அந்தத் தீர்ப்பில் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதை இணைப்பு சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் வங்கி சேவைக்காகப் பான் கார்டினை பயன்படுத்துபவர்களுக்கு இணைப்பு தேவையில்லை என்று வெளிவந்த தீர்ப்பு தேவையில்லாத ஒன்றாகச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன கருத்து கூறும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications