பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 100க்கு 9 ரூபாய் கமிஷன்..!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கி வரிசையில் பல நாட்கள் நின்றதை நாம் மறந்திருக்க முடியாது. பல கருப்பு பண முதலைகள் இதனை மாற்ற முடியாமல் குடோன்களில் குப்பைகளோடு குப்பையாகவும், பல குப்பை தொட்டிகளில் போட்டதையும் நாம் பார்த்தோம்.

ஆனால் இன்றும் இதனை மாற்ற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.? ஆனால் அதற்குக் கொஞ்சம் செலவாகும்.

ஜூன் 30

ஜூன் 30

மத்திய அரசால் பணப் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை என்ஆர்ஐகளுக்கு வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம்.

இதனைப் பயன்படுத்திப் பல ஆசாமிகள் அதிகக் கமிஷன் தொகைக்கு மோசடி வேலையைச் செய்து வருகின்றனர்.

 

100க்கு 9 ரூபாய் கமிஷன்

100க்கு 9 ரூபாய் கமிஷன்

என்ஆர்ஐகள் தங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமெனில் 100 ரூபாய்க்கு 9 ரூபாய் கமிஷன் அளிக்க வேண்டும். அதாவது ஒரு கோடி ரூபாய் மாற்ற வேண்டுமென்றால் 9 லட்சம் ரூபாய் கமிஷனாக அளிக்க வேண்டும். இதுதான் இன்றைய நிலை.

எதற்காக இந்தக் கமிஷன்..?

எதற்காக இந்தக் கமிஷன்..?

என்ஆர்ஐ வாயிலாகப் பணத்தை மாற்ற நினைப்பவர்கள் பெரும்பாலானோர், தங்களது உண்மையான விபரத்தை அளிக்கவும், தங்களது வருமான கணக்கில் இந்தப் பணத்தைக் காட்டு விரும்பாதவர்கள். இங்குத் தான் கமிஷன் வேலை செய்கிறது

என்ஆர்ஐ வாயிலாகப் பணத்தை மாற்ற நினைக்கும் சிலர் மட்டுமே தங்களது வருமான கணக்கில் காட்டப்படும் பணத்தை மாற்றுகின்றனர்.

 

1 சதவீத கமிஷன்

1 சதவீத கமிஷன்

இந்தியாவில் அதிகளவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், பணப் பரிமாற்றரத்திற்காக வரும்போது அவர்களிடம் இருந்து என்ஆர்ஐ-களுக்குச் சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை என்ஆர்ஐகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.

இப்படிதான் இந்த மோசடிகள் நடந்து வருகிறது.

 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

உலக நாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு ஏதுவாக இருக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆலோசித்துப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஜூன் 30ஆம் தேதி வரை அனுமதி அளித்தது.

சந்தையில் இதன் மூலம் பல மோசடிகள் நடக்கும் காரணத்தால், இந்தச் சேவையை ஜூன் 25ஆம் தேதியுடன் முடிக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

 

கைது..

கைது..

கடந்த மாதம், தானே பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 3 மோசடியாளர்களைக் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் ஹைதராபாத்-இல் ஒரு தொழிலதிபர் 3.48 கோடி ரூபாய் மாற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

 

5 இடங்கள் மட்டுமே

5 இடங்கள் மட்டுமே

தற்போதைய நிலையில் இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் இருக்கும் ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+