நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ்-இன் தலைவர் சந்தீப் டட்லானி திடீரென ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இது இன்போசிஸ் நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தாலும், விஷால் சிக்காவிற்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
சந்தீப் டட்லானி
சந்தீப் டட்லானி தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய மென்பொருளின் வருவாய் மற்றும் லாப அளவீடுகளைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.
உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
மேலும் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன்னும் பின்னும் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து பல உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இதனால் அடுத்தக் கட்ட ஊழியர்களுக்கு நிர்வாகத்தில் உயர் பதிவிகளும் பொறுப்புகளும் அளிக்கப்பட்டது.
புதிய மென்பொருள்
இதன் படி சந்தீப் டட்லானி-க்கும் புதிய மென்பொருளின் வருவாய் மற்றும் லாபத்தைக் கவனிக்கும் பொறுப்பும், கூடவே இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியும் இவருக்குக் கிடைத்தது.
ராஜினாமா
இந்த முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் டட்லானி வியாழக்கிழமை தனது ராஜினாமா குறித்து லிங்க்டு-இன் தளத்தில் பதவின் மூலம் வெளியிட்டார்.
இதற்கு அவர் இன்போசிஸ் நிறுவனத்தின் வெற்றியும், உறுதியான நிர்வாகக் குழுவின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். ஆனால் எனது சொந்த காரணத்திற்காக இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று தெரிவித்தார்.
இதனுடன் அடுத்த out-of-the world திட்டம் இருக்கிறது. தொடர்ந்து காத்திருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் டட்லானி.
புதிய அதிகாரிகள்
இதன் பின் இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் சந்தீப் டட்லானி பணியில் கார்மேஷ் வஷ்வானி மற்றும் நித்தேஷ் பங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
மேலும் இன்போசிஸ் நிறுவனம் விப்ரோ நிறுவனத்தில் இருந்து சேர்ந்த இந்திரபிரீத் ஷ்வானே அவர்களைக் குரூப் ஜெனரல் கவுன்சில் ஆக நியமித்துள்ளதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications