ஆதார் எண் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் நிதானமாகக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வது, அரசு அளிக்கும் மானியங்கள் பெறுவது, அரசு திட்டங்களைப் பயன்படுத்தி நன்மை பெறுவது என அனைத்திற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் வங்கி கணக்கை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதனால் பல முக்கிய வங்கிகள் இணையதளம், மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சேவை வழங்கி வருகின்றன. அதே நேரம் எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் வங்கி ஏடிஎம் மூலமாகவும் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சேவையை வழங்குகின்றன.
எனவே இங்கு நாம் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் எப்படி எல்லாம் இணைக்கலாம் என்று இங்குப் பார்ப்போம்.
இணையதளம் மூலமாக வங்கி கணக்கை எப்படி அதார் எண்ணுடன் இணைப்பது?
1. உங்கள் வங்கி கணக்கின் இணையதள வங்கி சேவையில் உள்நுழைய வேண்டும்.
2. ஆதார் கார்டு விவரங்களைப் பதிவேற்றவும் என்ற தெரிவை கண்டறிந்து அங்கு உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டுச் சமர்ப்பிப்பதன் மூலமாக இணைக்கலாம்.
3. இணைப்பு முடிந்த உடன் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும்.
ஆதார் கார்டினை எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் இணைப்பது எப்படி?
1. உங்களது மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் போது உங்களால் எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் ஆதார் கணக்கை இணைக்க முடியும்.
2. ஒருவேலை நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் 567676 என்ற எண்ணுக்கு UID(space)Aadhaar number(space)Account number வடிவத்தில் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் எளிதாக இணைக்க முடியும்.
3. ஒரு வேலை உங்கள் வங்கி கணக்கு இணைக்கவில்லை என்றால் எஸ்எம்எஸ் தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
4. மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் பொது எஸ்எம்எஸ் சரிபார்ப்பு உங்களுக்கு வரும்.
5. பல வங்கிகள் இதே போன்று எஸ்எம்எஸ் மூலமாக வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை வழங்குகின்றன.
ஏடிஎம் மையங்களில் அதார் எண்ணுடன் வங்கி கணக்கை எப்படி இணைப்பது?
1. சில வங்கிகள் ஏடிஎம் சேவை மூலமாக ஆதார் எண்ணை வங்கி கணக்கை இணைக்கும் சேவையினை வழங்குகின்றன.
2. வங்கி ஏடிஎம் மையங்களில் உங்களது ஸ்மார்ட் கார்டினை ஸ்வைப் செய்து சேவை - பதிவுகள் என்ற தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.
3. பினார் ஆதார் பதிவு செய்தல் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. இங்கு வங்கி கணக்கு வகையைத் தேர்வு செய்து அங்கு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
சிரமம் இல்லை
வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது சிரமமான காரியம் இல்லை. அதே நேரம் நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கலாம். அதற்கு நீங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் கார்டு நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications