பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவையை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஸ்பைசி சம்மர் சேல் என்ற விமான டிக்கெட் ஆஃபர் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 799 ரூபாய் டிக்கெட் ஆஃபரில் ஜூன் 26 முதல் செப்டம்பர் 14 வரை பயணம் செய்யலாம் என்று இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
799 ரூபாய் ஆஃபர்
மேலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 799 ரூபாய் ஆஃபர் டிக்கெட்டினை புக் செய்ய ஜூன் 19-ம் தேதி தான் கடைசித் தேதி ஆகும்.
ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினமும் 364 விமானப் பயணச் சேவைகளை 46 இடங்களுக்கும் அதில் 39 உள்நாட்டு விமான நிலையங்களுக்கு, 7 வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
இண்டிகோ நிறுவனம் 899 ரூபாய் எனவும், கோஏர் நிறுவனம் 899 ரூபாய் எனவும், விஸ்தரா நிறுவனம் 849 ரூபாய் எனவும் ஆஃபர் விலையில் விமானப் பயணங்களை அளிக்கின்றன.
வளர்ச்சி
விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமான டிக்கெட் ஆஃபர்கள் அளித்து வருவதால் 27 சதவீதமாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
புதிய அறிவிப்பு
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அன்மையில் வெளியிட்ட அறிவிப்பில் மெட்ரோ ஆலாத நிறுவனங்களில் இருந்து பெட்ரோ நகர விமான நிலையங்களை இணைக்கும் விதமாக 8 வழித்தடங்களில் ஜூலை முதல் சேவையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய வழித்தடங்கள்
மேலும் ஹைதராபாத்-ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர்-குவஹாத்தி மற்றும் ஹைதராபாத்-சண்டிகர், பாட்னா-மும்பை, பாட்னா-கொல்கத்தா, பாட்னா-ஹைதராபாத் மற்றும் பட்னா-பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் நேரடி விமானங்களை இயக்கவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உதான் திட்டம்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த மாதம் முதல் மும்பையில் இருந்து போர்பந்தர் மற்றும் கண்ட்லா பகுதிகளுக்கு இரண்டு விமானங்களை உதான் திட்டத்தின் கீழ் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் 78 நபர்கள் அமரக் கூடிய Q400 ஜெட் விமானத்தை ஜூலை 10 முதல் இயக்க முடிவு செய்துள்ளது.
ரிடெய்ல்
கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக விரைவில் இ-காமர்ஸ் இணையதளம் ஒன்றை 150 கோடி முதலீட்டில் துவக்க இருக்கின்றது. இதன் மூலம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications