ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 67,000 அதிகாரிகளைக் கட்டம்கட்டய மத்திய அரசு..!

அரசு பணியிடங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 67,000 அதிகாரிகளின் சேவை அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்ய முடிவு செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சரியான மற்றும் முழுமையான பணிகளைச் செய்யாத அதிகாரிகளுக்கு மத்திய அரசு விஆர்எஸ் வழங்கவும் அல்லது பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

ஏன் இந்தத் திடீர் முடிவு..?

மரக்கட்டைகள் நீக்கம்..

மரக்கட்டைகள் நீக்கம்..

தனியார் நிறுவனங்களில் செய்வதே போலவே சரியான சேவை அளிக்காத அதிகாரிகளை மத்திய அரசு பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் சேவை தரத்தை உயர்த்துவது மட்டும் அல்லாமல், மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பான முறையிலும், வேகமாகவும் செய்ய முடியும் என்பது மத்திய அரசின் திட்டம்.

இதன் மூலம் மத்திய அரசு பணியிடங்களில் தேங்கிக்கிடக்கும் மரக் கட்டைகளை நீக்க உள்ளது மத்திய அரசு.

 

67,000 ஊழியர்கள்

67,000 ஊழியர்கள்

இந்நிலையில், தற்போது மத்திய அரசு சுமார் 67,000 ஊழியர்களின் சேவை விபர அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது என Department of Personnel and Training துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

குரூப் ஏ

குரூப் ஏ

இந்த 67,000 ஊழியர்கள் பட்டியலில், 25,000 ஊழியர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்தேந்திரா சிங்

ஜித்தேந்திரா சிங்

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங் கூறுகையில், மத்திய அரசு ஒரு கையில் உயர் தர சேவையை அளிக்கவும், ஊழல், லஞ்சத்தில் சற்று பொறுத்துக்கொள்ளாத மனப்பான்மையைக் கொண்டும், மறு கையில் அனைத்து அதிகாரிகளும் பிரென்லி சூழ்நிலையில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறது.

தொடரும்..

தொடரும்..

மேலும் இத்தகைய ஊழியர்களின் சேவை மறுஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும், அதன் மூலம் அரசு சேவைகளின் தரம் உயரும். அதுமட்டுமல்லால் மத்திய அரசு அவர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படும் பணத்திற்கு உரிய வேலையை வாங்க வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.

129 அதிகாரிகள்

129 அதிகாரிகள்

கடந்த ஒரு வருடத்தில் சுமார் 129 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக் கட்டாய ராஜிநாமா முறையில் பணியை விட்டு நீக்கியுள்ளது.

விதிமுறை

விதிமுறை

மத்திய அரசு விதிமுறைகளின் படி ஊழியர்களின் சேவை திறனை அவர்களது பணியின் 15 வருடத்தில் ஒரு முறையும், 25 வருடத்தில் ஒரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்நிலையில் மத்திய அரசு பணியிடங்களில் சுமார் 48.85 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+