ஜியோவின் வெற்றி 90% உறுதியானது.. ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்குப் புதிய பிரச்சனை..!

இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ அறிமுகம், அதன் மூலம் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அனைத்தையும் நாம் பார்த்த நிலையில், ஜியோ நிறுவனத்தின் வெற்றி இன்றளவு கேள்வியாகவே இருந்தது.

இந்நிலையில் இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது...

இலவசம்..

இலவசம்..

ஜியோ நிறுவனத்தின் இலவசங்கள் முடிந்த பின்பு அதனை யாரும் பயன்படுத்தமாட்டார்கள் என்ற கருத்துச் சந்தையில் பரவலாக இருந்த நிலையில், ஜியோ 303 ரூபாய் என்ற ஆஃபரை அறிவித்துச் சக போட்டி நிறுவனங்களைச் சோகத்தில் தள்ளியது.

இந்த ஆஃபரின் பற்றிய கணிப்புகளே தற்போது வெளியாகியுள்ளது.

 

90 சதவீத வாடிக்கையாளர்கள்

90 சதவீத வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனத்தின் 90 சதவீத வாடிக்கையாளர்கள், ஜியோவின் ப்ரைம் மெம்பர்ஷிப் பெற்றுள்ளனர், இது ஜியோ நிறுவனத்தின் முதல் வெற்றி எனப் பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் மெரில் லின்ச் நிறுவனங்களின் ஆய்வறிக்கை கூறுகிறது.

அடுத்த வெற்றி

அடுத்த வெற்றி

இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் இலவசங்கள் முடிந்த பின்பு இந்நிறுவனத்தின் 76 சதவீத வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் ஆஃபரை ரீச்சார்ஜ் செய்துள்ளனர்.

ஒற்றைச் சிம் வாடிக்கையாளர்கள்

ஒற்றைச் சிம் வாடிக்கையாளர்கள்

அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் 80 சதவீத வாடிக்கையாளர்கள் ஒற்றைச் சிம் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜியோவை இலவசமாக மட்டும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து, முக்கிய இணைப்பாகப் பயன்படுத்துகின்றனர் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

303 அல்லது 309 ஆஃபர்

303 அல்லது 309 ஆஃபர்

மேலும் 84 சதவீத வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தின் 303 அல்லது 309 ரூபாய் ஆஃபரை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மொபைல்கள்

மொபைல்கள்

இந்த ஆய்வில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் LYF மொபைல் போனில் வெறும் 5 சதவீத மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதேபோல் சாம்சங் போனில் 40 சதவீதமும், ஐபோனில் 7 சதவீதம் பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரச்சனை

பிரச்சனை

இதேபோல் ஜியோ நிறுவனத்தின் 41 சதவீத வாடிக்கையாளர்கள் இன்னமும் கால் இணைப்பதில் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர்.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

பாங்க் ஆஃப் அமெரிக்காவின் ஆய்வறிக்கையின் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில், ஜியோ வின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் வர்த்தக மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு ஜியோ பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் எனத் தெரிகிறது.

மக்கள்

மக்கள்

இந்தப் போட்டியின் மூலம் இந்தியாவில் டெலிகாம் சேவைகளின் கட்டணம் அதிகளவில் குறைவது நிச்சயம். அடுத்தச் சில ஆண்டுகளுக்கு இந்திய டெலிகாம் சந்தை இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+