தினமும் வேலைக்குச் செல்வது வீடு திரும்பவதை தாண்டி, இன்றைய தலைமுறையினர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல், புதிய கற்றலை பெறுதல், சவால்களை எதிர்கொள்ளுதல், இதன் சம்பளம் உயர்வு ஆகியவற்றைத் தாண்டி கரியர் குரோத் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
இந்நிலையில், நீங்கள் பணியாற்றும் ஊர் கூட உங்களது கரியர் வளர்ச்சிக்கும் முக்கிய தடையாக உள்ளது என்பது எத்தனைப் பேருக்கு தெரியும். ஆம் இது உண்மை.
13 நகரங்கள்
இந்தியாவில் 13 நகரங்களில் மக்களின் கரியர் வளர்ச்சிக்கும் எந்த அளவிற்கு வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளது.
இதில் சென்னையை பின்னுக்குத்தள்ளி பெங்களுரூ முதல் இடத்தை பிடித்துள்ளது.
முக்கிய துறை
இந்த ஆய்வை ஸ்டார்ட் அப், பிபிஓ மற்றும் கேபிஓ ஆகிய துறைகளின் வேலைவாய்ப்பு, அதன் வளர்ச்சி, வேலைவாய்ப்பின் நிலைப்பின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதன் படி அதிக வளர்ச்சி மற்றும் குறைவான வளர்ச்சி அளிக்கக் கூடிய நகரங்கள் எது என்பதை இப்போது பார்ப்போம்.
அதிக வளர்ச்சி
1. பெங்களுரூ
2. புனே
3. ஹைதராபாத்
4. மும்பை
5. டெல்லி
6. சென்னை
7. அகமதாபாத்
குறைவான வளர்ச்சி
1. லக்னோ
2. கொல்கத்தா
3. பரோடா
4. இந்தோர்
5. ஜெர்பூர்
6. சண்டிகார்


Click it and Unblock the Notifications