மும்பை: நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை அளிக்கும் ஜெட் ஏர்வேஸ், தனது விமானத்தில் பிறந்த குழந்தைக்குப் பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பயணிக்கும் சலுகையை அளித்து அசத்தியுள்ளது.
35,000 அடி உயரம்
ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட ஜெட்ஏர்வேஸ் 9W 569 விமானத்தில் கர்பமான பெண் பயணித்தார், 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருக்கையில் அந்தப் பெண்ணிற்குப் பிரசவ வலி எடுத்தது விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.
தாயும் சேயும் நலம்
இதன் காரணமாக 2.55 மணிக்குத் தாமம் நகரில் இருந்து புறப்பட்டுக் கொச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் மும்பையில் அவரத்தின் காரணமாகத் தரையிறக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
முதல் குழந்தை
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், இக்குழந்தைக்கு இந்நிறுவனம் பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பயணிக்கும் சலுகையை அளித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இந்திய பயணிகள் விமானச் சேவை சந்தையில் இண்டிகோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 17.6 சதவீத வாடிக்கையாளர்களைக் கொண்டு 2வது இடத்தில் இருக்கிறது ஜெட் ஏர்வேஸ்.
இந்நிறுவனம் தனது 300 விமானங்களை உலகில் சுமார் 68 இடங்களுக்கு விமானச் சேவை அளித்து வருகிறது. மேலும் பன்னாட்டு சேவை அளிப்பதில் இந்திய விமான நிறுவனங்களில் ஜெட் ஏர்வேஸ் முன்னோடி.
வீட்டுப் பட்ஜெட்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
சக்கரவர்த்தி
எஸ்ஐபி திட்டங்கள்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications