இந்திய ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அநியாயமாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றாலும், இதை நிர்வாகமும், உயர் அதிகாரிகள் வட்டமும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஆனால் வேலைவாய்ப்பு சந்தையில், மிட் லெவல் ஊழியர்கள் அதிகளவில் வேலையில் இருந்து மாறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஹெட்ஹண்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலையில் பதற்றம்..
பொதுவாக மிட் லெவல் ஊழியர்கள் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சராசரியாக 15 சதவீதம் மட்டுமே இருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இது கடந்த வருடத்தை விட சுமார் 250 சதவீதம் அதிகமாகும்.
தடுமாற்றம்..
ஐடி நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் வட்டம் கூறுவது உண்மையாக இருந்தால், வேலைவாய்ப்பு சந்தையில் ஏன் இந்த திடீர் உயர்வு. இதற்கு என்ன சொல்லப்போகிறது இந்த வட்டம்..?
இது உண்மையில் 150 பில்லியன் டாலர் வர்த்தகத்தை கொண்டு இந்திய ஐடி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தை வெளிப்படையாக காட்டுகிறது.
என்ன காரணம்..?
அமெரிக்க அரசு எச்1பி விசாவில் அறிமுகப்படுத்திய புதிய கட்டுப்பாடுகள், இந்திய ஐடித்துறையில் அமலாக்கம் செய்யப்படும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணம்.
இதில் ஐடி நிறுவனங்கள் தங்களின் லாப அளவுகளை குறைக்கக்கூடாது என்பாதற்காக செலவுகளை குறைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்வது முக்கியமானதாக இருக்கிறது.
56,000 ஊழியர்கள்
இந்த வருடம் மட்டும் இந்திய ஐடி நிறுவனங்களில் இருந்து சுமார் 56,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்த ஐடி ஊழியர்கள் வெளியேற்றம் அடுத்த சில வருடங்களுக்கும் தொடரும் என தெரிகிறது.
இதுதான் டிரென்ட்
இதை ஃபாலோ பண்ணுங்க..!


Click it and Unblock the Notifications