இந்திய பொதுத்துறை வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக்கடனைத் தீர்க்க அதிக கடன் நிலுவை வைத்துள்ள 12 நிறுவனங்கள் மற்றும் கணக்குகளை திவாலாக அறிவிக்க ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முதல் சவுக்கடி லான்கோ இன்பராடெக் நிறுவனத்தின் மீது விழ உள்ளது. இதன் பணிகளை ஐடிபிஐ வங்கி தலைமையில் திவாலாக்கும் பணிகள் நடைபெறுகிறது.
17,000 கோடி ரூபாய் கடன்
மார்ச் 2016ஆம் ஆண்டு வரையில் லான்கோ இன்பராடெக் நிறுவனத்திற்கு வங்கிகள் பணமாக 7,799 கோடி ரூபாயும், பணமில்லாத உத்திரவாதமாக 3,349 கோடி ரூபாயும் அளித்துள்ளது. மேலும் சந்தையில் இந்நிறுவனத்திற்கு சுமார் 17,000 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன கணக்கு..?
இன்றைய நிலையில் லான்கோ இன்பராடெக் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பே 561.44 கோடி ரூபாய் மட்டுமே. ஒரு பங்கின் விலை மும்பை பங்குச்சந்தையில் 1.70 ரூபாய்.
இந்நிலையில் எப்படி வங்கிகள் லான்கோ நிறுவனத்தின் 8000 கோடி ரூபாய் பணமாக மட்டும் கடன் கொடுத்துள்ளது.
திவால் ஆன நிறுவனம்..
இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி அதிகளவிலான கடன் நிலுவை வைத்திருக்கும் நிறுவனங்களைத் திவால் ஆக அறிவிக்க உத்தரவிட்டுள்ளது.
திவாலாக அறிவிக்கும்பட்சத்தில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை முடங்கி அதனை சந்தையில் விற்பனை செய்து முறையாக கடனை வங்கிகள் வசூல் செய்யும்.
அடுத்த நிறுவங்கள்
லான்கோ இன்பராடெக் நிறுவனத்தை தொடர்ந்து இப்பட்டியலில் அம்டெகக் ஆட்டோ, அலோக் இண்டஸ்ட்ரீஸ், பூஷன் ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் வருகிறது.
மேலும் ஐடிபிஐ வங்கி தலைமையில் ரிசர்வ வங்கி சுமார் 12 நிறுவனங்களை திவாலாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications